சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதியன்று போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு (Formers) சொந்தமாக இருக்கக்கூடிய விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க கூடியதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பவர்கிரிட் நிறுவனமும் (Powergirid Company) தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் சேர்ந்து இந்த வேலையை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளன.
இந்த திட்டம் நடைமுறைக்கு வருமானால் விவசாயிகள் பெருமளவுக்கு பாதிக்கப்படுவார்கள். எனவே பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டு பல கட்டங்களில் போராட்டம் நடத்தியுள்ளோம். ஆனால் முழுமையான இழப்பீடு வழங்க மால் நிறுவனங்கள் மின்கோபுர பணிகளை காவல்துறையின் (Police Department) ஒத்துழைப்புடன் மேற்கொண்டு வருகிறார்கள். திட்டப்பணிகள் நிறைவடைந்து விட்டால் இழப்பீடுகள் கிடைக்காத விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க எந்த உத்தரவாதமும் இல்லாமல் இருக்கின்றது.
விவசாயிகளுக்கு நிலம், மரங்கள், பயிர்கள், கட்டிடங்கள் போன்றவற்றிற்கு அரசு தீர்மானித்த தொகையை சமந்தபட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அரசு முழுமையாக செலுத்திய பிறகே வேலையை செய்ய அனுமதியளிக்க வேண்டும். கிணறுகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென்று தமிழக மின்துறை அமைச்சர் (Electricity Minister) அவர்களை நேரில் சந்தித்து வற்புறுத்திய பிறகும் இதுவரை எந்தவொரு அரசாணையும் வெளியடப்படவில்லை.
தமிழ்நாடு அரசு மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அவர்கள் பாதிப்புகளுக்கு ஏற்றவாறு முழுமையான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீடு வழங்கப்படாத விவசாயிகளின் நிலத்தில் மின் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறமால் தடுத்து நிறுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு (Collector) உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் போராட்டம் நடைபெற உள்ளது. எனவே வருகிற செப்டம்பர் 7ஆம் தேதியன்று விவசாயிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQY