கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தத் தளர்வுகளும் இன்றி பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது..!
தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு எந்தத் தளர்வும் இல்லை என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தத் தளர்வுகளும் இன்றி பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
சென்னை நீங்கலாக 100 நபர்களுக்கு குறைவாக உள்ள தொழிற்சாலைகள் முழு பணியாளர்களுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு தனிப்பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறலாம். பயிற்சி பெறும் விளையாட்டு வீரர் – வீராங்கனைகள் ஆட்சியர் அல்லது ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும்.
வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்துவர மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை சிறப்பு ரயில் மூலம் படிப்படியாக அழைத்துவரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அனுமதி அளித்துள்ளார். மேலும் 100 நாள் வேலைத்திட்டத்தில் 100 சதவிகித பணியாளர்களை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 50% பணியாளர்களை 100% பணியாளர்களாக உயர்த்த அனுமதி வழங்கப்படுகிறது.இதேபோல +2 விடைத்தாள் திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்கு அளிக்கப்படுகிறது.
ஊரடங்கு 4.0 - தடை தொடரும் மாவட்டங்கள் எவை?....
- சென்னை
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- செங்கல்பட்டு
- விழுப்புரம்
- கடலூர்
- ராணிப்பேட்டை
- திருப்பத்தூர்
- கள்ளக்குறிச்சி
- திருவண்ணாமலை
- அரியலூர்
- பெரம்பலூர்
தளர்வு அளிக்கப்படும் மாவட்டங்கள் எவை?...
- கோவை
- நீலகிரி
- சேலம்
- ஈரோடு
- திருப்பூர்
- நாமக்கல்
- கரூர்
- தருமபுரி
- கிருஷ்ணகிரி
- வேலூர்
- திருநெல்வேலி
- தூத்துக்குடி
- தென்காசி
- கன்னியாகுமாரி
- தேனி
- மதுரை
- விருதுநகர்
- சிவாகங்கை
- ராமநாதபுரம்
- திண்டுக்கல்
- திருச்சி
- திருவாரூர்
- தஞ்சாவூர்
- நாகை
- புதுக்கோட்டை