October 31 வரை லாக்டௌனை நீட்டித்தது தமிழக அரசு: புதிய தளர்வுகள் அறிவிப்பு!!

லாக்டௌன் கட்டுப்பாடுகளை அக்டோபர் 31 வரை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 29, 2020, 10:36 PM IST
  • லாக்டௌன் கட்டுப்பாடுகளை அக்டோபர் 31 வரை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  • திரைப்பட படப்பிடிப்பு நடைபெற அரசாங்கம் அனுமதித்துள்ளது.
  • புறநகர் ரயில்களின் இயக்கம் இப்போதுள்ளது போல் நிறுத்தப்பட்டே இருக்கும்.
October 31 வரை லாக்டௌனை நீட்டித்தது தமிழக அரசு: புதிய தளர்வுகள் அறிவிப்பு!! title=

லாக்டௌன் கட்டுப்பாடுகளை அக்டோபர் 31 வரை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை, மாநிலத்தில் புறநகர் ரயில்களின் இயக்கம் இப்போதுள்ளது போல் நிறுத்தப்பட்டே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு வரவிருக்கும் மாதத்திற்கான புதிய லாக்டௌன் (Lockdown) வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இந்த லாக்டௌனில் திரைப்பட படப்பிடிப்பு நடைபெற அரசாங்கம் அனுமதித்துள்ளது. எனினும் படப்பிடிப்பு நடக்கும் செட்டில் 100 பேர் மட்டுமே இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ALSO READ: Unlock 5.0 இல் பள்ளிகள் திறக்கப்படலாம், அரசாங்கத்தின் புதிய திட்டம் என்ன?

செட்டில் உள்ளவர்களும் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். தனி மனித இடைவெளியை பின்பற்றுவதுடன் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கடைபிடிக்கப் பட வேண்டும்.

மாநிலத்தில் புறநகர் ரயில்களுக்கான கட்டுப்பாடுகள் முன்பு இருந்தது போலவே தொடரும்.

தேநீர் கடைகள் மற்றும் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. இரவு 10 மணி வரை எடுத்துச் செல்லும் சேவை அனுமதிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் (Tamil Nadu) இன்று 5,546 பேர் புதிதாக COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 70 இறப்புகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,91,943 ஆக உள்ளது, இதில் 9,453 பேர் இறந்துள்ளனர் என மாநில சுகாதாரத் துறையை மேற்கோள் காட்டி ANI அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ALSO READ: இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துக்கான காத்திருப்பு எப்போது முடிவுக்கு வரும்.. !!!

Trending News