ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை!!

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை!! 

Updated: Aug 27, 2019, 12:55 PM IST
ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை!!

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை!! 

ஊதிய உயர்வு, தகுதிக்கேற்ற ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்புதல், பணிப் பாதுகாப்பு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசாணைப்படி கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும், அரசு சுகாதார மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவீதம் ஒதுக்கீடு என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களாக சென்னையில் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட நிலையில், இன்று தமிழகம் முழுவதும்  அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், சென்னை தலைமைசெயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதில் மருத்துவ கல்வி இயக்குநர், சுகாதார இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவார்கள் என கூறப்படுகிறது.