சென்னை: தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரம்யா பாரதி டிஐஜி ஆக பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 30 ஐ.பி.எஸ் அதிகாரிகளில் (Tamil Nadu Police) ஐஜிக்களாக 14 பேருக்கும் டிஐஜி-க்களாக 3 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டும், 13 பேர்களுக்கு பணியிடமாற்றமும் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாற்றப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளும், அவர்களுக்கான புதிய பதவிகள் மற்றும் பணியிடங்களில் விவரப் பட்டியல் பின்வருமாறு:
ரம்யா பாரதி டிஐஜி ஆக பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக நியமனம்.
நெல்லை சரக டிஐ.ஜிஆக பிரவேஷ்குமார் நியமனம்.
சேலம் சரக டிஐஜி ஆக பிரவீன் குமார் நியமனம்.
திண்டுக்கல் சரக டிஐஜி., ஆக ரூபேஷ்குமார் மீனா நியமனம்.
வேலூர் சரக டிஐஜி., ஆக ஆனி விஜயா நியமனம்.
தஞ்சை சரக டிஐஜி., ஆக கயல்விழி நியமனம்.
ALSO READ | செல்போன் டவர் காணவில்லை! போலீசில் புகார்
பாபு ஐ.ஜி. ஆக பதவி உயர்வு பெற்று திருப்பூர் காவல் ஆணையராக நியமனம்.
சமூகநீதி மற்றும் மனித உரிமை காவல் துறை ஐஜியாக செந்தாமரைக்கண்ணன் நியமனம்.
துரைகுமார் ஐஜி ஆக பதவி உயர்வு பெற்று நெல்லை காவல் ஆணையராக நியமனம்.
ஆசியம்மாள் ஐஜிஆக பதவி உயர்வு பெற்று உளவுத்துறை ஐஜி ஆக நியமனம்.
சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையராக கபில் குமார் நியமனம்.
பொன்னி டிஐஜி ஆக பதவி உயர்வு பெற்று மதுரை காவல் ஆணையராக நியமனம்.
மகேஸ்வரி ஐஜி ஆக பதவி உயர்வு பெற்று தொழில் நுட்ப ஐஜிஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமலாக்கப்பிரிவு ஐஜியாக விஜயகுமாரி நியமனம்.
லஞ்ச ஒழிப்புத்துறையின் ஐஜி ஆக லலிதாலட்சுமி நியமனம்.
ALSO READ | வெண்பனி மலையில் இந்திய ராணுவத்தினரின் டான்ஸ்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR