Tamil Nadu Local Body Election: ஹிஜாப் அணிந்து வாக்களிக்க கூடாது: பாஜகவினரின் எதிப்பால் வாக்குப்பதிவில் பரபரப்பு

Tamil Nadu Local Body Election: மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி எட்டாவது வார்டு அல்-அமீன் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் வாக்குப்பதிவின் போது பாஜக பூத் ஏஜென்ட் இஸ்லாமிய பெண்களை ஹிஜாப்பை அகற்றக் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குபதிவு நிறுத்தப்பட்டது. 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 19, 2022, 03:45 PM IST
Tamil Nadu Local Body Election: ஹிஜாப் அணிந்து வாக்களிக்க கூடாது: பாஜகவினரின் எதிப்பால் வாக்குப்பதிவில் பரபரப்பு title=

மேலூர் வாக்குபதிவு மையத்தில் இசுலாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்ற கோரி பாஜக பூத் ஏஜென்ட் அதிகாரியுடன் வாக்குவாதம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி எட்டாவது வார்டு அல்-அமீன் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் வாக்குப்பதிவின் போது பாஜக பூத் ஏஜென்ட் இஸ்லாமிய பெண்களை ஹிஜாப்பை அகற்றக் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குபதிவு நிறுத்தப்பட்டது. 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. காலை 7 மணி முதல் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவில் மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு அல்-அமீன் பள்ளியில் பாஜக ஏஜென்ட் ஆக செயல்படும் கிரிராஜன் வாக்களிக்க வந்த இசுலாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்றக்கோரி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வாக்குப்பதிவு அதிகாரிகள் வாக்குப்பதிவை நிறுத்தி வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர். 

மேலும் படிக்க |LIVE நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 வாக்குப்பதிவு மும்முரம்

இதனை தொடர்ந்து மற்ற கட்சியினர் வாக்குபதிவு மையத்தைவிட்டு வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கிரிராஜனை வாக்கு பதிவு மையத்தை விட்டு அப்புறப்படுத்தியதால் பரபரப்பு குறைந்து மீண்டும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் சுமார் 30 நிமிடங்கள் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

கர்நாடகாவில் தொடங்கிய ஹிஜாப் பிரச்சனை ஏற்கனவே நாடு முழுவதும் பரவி பல வித கருதுக்களும், கண்டணங்களும், விமர்சனங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 21 மாநகராட்சியிலும் திமுக கூட்டணிக்கு கைப்பற்றும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News