Sep 7 முதல் மாநிலத்திற்குள் பயணிகள் ரயில்கள், தனியார் பேருந்துகளுக்கு அனுமதி: EPS

தமிழகத்தில் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 2, 2020, 04:56 PM IST
  • பொது போக்குவரத்து செப்டம்பர் 1 முதல் SOP-களுடன் மீண்டும் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
  • செப்டம்பர் 7 முதல் தனியார் பேருந்துகள் மற்றும் பயணிகள் ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் – தமிழக அரசு.
  • மெட்ரோ ரயில் சேவைகளும் செப்டம்பர் 7 முதல் தொடங்கும்.
Sep 7 முதல் மாநிலத்திற்குள் பயணிகள் ரயில்கள், தனியார் பேருந்துகளுக்கு அனுமதி: EPS title=

சென்னை: தமிழகத்தில் (Tamil Nadu) செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

அன்லாக் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பேருந்து சேவைகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து செப்டம்பர் 1 முதல் SOP-களுடன் மீண்டும் தொடங்கப்படும் என்று தமிழக அரசு (Tamil Nadu Government) அறிவித்திருந்தது.

லாக்டௌன் தடைகளை மாநில அரசு தளர்த்திய பின்னர், பெருநகர போக்குவரத்துக் கழகம் (MTC) 161 நாட்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தனது சேவைகளைத் தொடங்கியது. மொத்தமாக 22,000 பேருந்துகள் இருக்கும் நிலையில், முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் 6,090 பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. தற்போதைக்கு எந்த மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு அனுமதி இல்லை என்றும், பேருந்துகள் மாவட்ட எல்லைக்குள் இயக்க அனுமதிக்கப்படுவதாகவும் அரசாங்கம் முன்பு அறிவித்திருந்தது.

உள்-மாவட்ட பேருந்து நடவடிக்கைகளை அனுமதிப்பதன் மூலம் COVID-19 லாக்டௌன் கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தியிருந்தாலும், மாவட்டங்களுக்குள் இயக்கப்படும் பேருந்துகள் லாபம் ஈட்டாது என்பதால், தனியார் பஸ் ஆபரேட்டர்கள் தங்கள் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தனர். காத்திருப்பு மற்றும் கண்காணிப்பு அணுகுமுறையைப் பின்பற்ற அவர்கள் முடிவு செய்தனர்.

இதற்கிடையில், அவர்களின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர், பயணிகள் ரயில் சேவைகள் மற்றும் தனியார் பேருந்துகள் மாவட்டங்களுக்கு இடையே இயக்க அனுமதிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (K Palanisamy) இன்று அறிவித்தார். இந்த அறிவிப்பை தனியார் பேருந்து ஆபரேட்டர்கள் வரவேற்றுள்ளனர். செப்டம்பர் 7 முதல் தனியார் பேருந்துகள் மற்றும் பயணிகள் ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் என்று ஒரு அரசாங்க அறிவிப்பு தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் (Metro Train) சேவைகளும் செப்டம்பர் 7 முதல் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: செப்டம்பர் 7 முதல் இந்த மாவட்டங்களில் நீதிமன்றங்கள் திறப்பு: நேரடி விசாரணைகள் நடக்கும்!!

Trending News