தமிழகத்தில் கனமழை தொடரும்: சென்னையின் நிலை என்ன? வானிலை அறிக்கை

Tamil Nadu Rain Update: தமிழகத்தில் பல பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 2, 2022, 01:08 PM IST
  • தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் மழை.
  • எந்தெந்த மாவட்டங்களில் மழை இருக்கும்?
  • தமிழகத்துக்கான வானிலை அறிக்கை இதோ.
தமிழகத்தில் கனமழை தொடரும்: சென்னையின் நிலை என்ன? வானிலை அறிக்கை title=

தமிழகத்தில் பல பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தமிழக பகுதிகளின் மேல்  நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 02.11.2022, அதாவது இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை,  தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

03.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

04.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

05.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

06.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை,  சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர்,  தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு:

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22- 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

 அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மேலும் படிக்க | வெளுத்து வாங்கும் கனமழை: எந்ததெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் லீவு?

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 

பெரம்பூர் (சென்னை), சென்னை கலெக்டர் அலுவலகம் (சென்னை), ஆவடி (திருவள்ளூர்) தலா 17, காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), பொன்னேரி (திருவள்ளூர்) தலா 16, ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) தலா 14, சோழிங்கநல்லூர் (சென்னை), செய்யூர் (செங்கல்பட்டு), எம்ஜிஆர் நகர் (சென்னை), அம்பத்தூர் (திருவள்ளூர்), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), அயனாவரம் (சென்னை), வில்லிவாக்கம் (திருவள்ளூர்) தலா 13,  அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 12, திருப்போரூர் (செங்கல்பட்டு), டிஜிபி அலுவலகம் (சென்னை), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) தலா 11, சென்னை விமான நிலையம் (சென்னை) 10, பள்ளிக்கரணை ARG (சென்னை), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), தொண்டையார்பேட்டை (சென்னை), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), நந்தனம் ARG (சென்னை) தலா 9,  ஏசிஎஸ் கல்லூரி ARG (காஞ்சிபுரம்), மீனம்பாக்கம் ISRO AWS (சென்னை), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), சோழவரம் (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்) தலா 8, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), திருவள்ளூர், வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), வந்தவாசி (திருவண்ணாமலை), செய்யார் (திருவண்ணாமலை), எட்டயபுரம் (தூத்துக்குடி) தலா 7, திருச்செந்தூர் (தூத்துக்குடி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்),  நாங்குநேரி (திருநெல்வேலி), கழுகுமலை (தூத்துக்குடி), கடம்பூர் (தூத்துக்குடி) தலா 6, பூந்தமல்லி (திருவள்ளூர்), பூண்டி (திருவள்ளூர்), கோவில்பட்டி (தூத்துக்குடி), சாத்தூர் (விருதுநகர்), கடலாடி (ராமநாதபுரம்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), மதுராந்தகம் (செங்கல்பட்டு), ஒகேனக்கல் (தருமபுரி), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), திருவாலங்காடு (திருவள்ளூர்), காயல்பட்டினம் (தூத்துக்குடி), சேட்பேட்டை (திருவண்ணாமலை), வெம்பக்கோட்டை (விருதுநகர்), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), காஞ்சிபுரம்,பிலவாக்கல் (விருதுநகர்), திரூர் Agro  (திருவள்ளூர்) தலா 5, அரக்கோணம் (இராணிப்பேட்டை), புழல் ARG (திருவள்ளூர்), வளத்தி (விழுப்புரம்), சிவகிரி (தென்காசி), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), மரக்காணம் (விழுப்புரம்), மணியாச்சி (தூத்துக்குடி), செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), ஆழியாறு (கோயம்புத்தூர்), திண்டிவனம் (விழுப்புரம்), கயத்தாறு (தூத்துக்குடி), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), விளாம்பாக்கம் (செங்கல்பட்டு), (தூத்துக்குடி) தலா 4,  கயத்தாறு ARG (தூத்துக்குடி), ஆனந்தபுரம் (விழுப்புரம்), முகையூர் (விழுப்புரம்), ஆரணி (திருவண்ணாமலை), வைப்பார் (தூத்துக்குடி), பேரையூர் (மதுரை), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), கேதார் (விழுப்புரம்), சங்கரன்கோவில் (தென்காசி), தாம்பரம் (செங்கல்பட்டு), நாகப்பட்டினம், ராஜபாளையம் (விருதுநகர்), தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), அம்முண்டி (வேலூர்),  சாத்தான்குளம் (தூத்துக்குடி), கடல்குடி (தூத்துக்குடி) தலா 3, திருத்தணி (திருவள்ளூர்), தூத்துக்குடி துறைமுகம் AWS (தூத்துக்குடி), திருத்தணி PTO (திருவள்ளூர்), செம்மேடு (விழுப்புரம்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), செஞ்சி (விழுப்புரம்), கலவை AWS (ராணிப்பேட்டை), தரமணி ARG (சென்னை), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), ராசிபுரம் (நாமக்கல்), புதுச்சேரி, பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), ஆற்காடு (இராணிப்பேட்டை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), கன்னிமார் (கன்னியாகுமரி), வாலாஜா (ராணிப்பேட்டை), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), குளச்சல் (கன்னியாகுமரி),  கலசபாக்கம் (திருவண்ணாமலை), தம்மம்பட்டி (சேலம்), சோலையார் (கோவை), சூளகிரி (கிருஷ்ணகிரி), பாலக்கோடு (தருமபுரி), போளூர் (திருவண்ணாமலை), வால்பாறை PAP (கோவை), அவலூர்பேட்டை (விழுப்புரம்), விருதுநகர் (விருதுநகர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), பொன்னை அணை (வேலூர்), வானூர் (விழுப்புரம்), சூரப்பட்டு (விழுப்புரம்), திருமூர்த்தி அணை (திருப்பூர்) தலா 2 ,  சிவகாசி (விருதுநகர்), எறையூர் (கள்ளக்குறிச்சி), அமராவதி அணை (திருப்பூர்), புதுச்சத்திரம் (நாமக்கல்), கேசிஎஸ் மில்-1 மூங்கில்துறை (கள்ளக்குறிச்சி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்) , கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), சூரங்குடி (தூத்துக்குடி), சூரங்குடி (தூத்துக்குடி), மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி),  சோளிங்கர் (இராணிப்பேட்டை), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), கரியகோவில் அணை (சேலம்), தர்மபுரி PTO (தருமபுரி), குடியாத்தம் (வேலூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி),  கஞ்சனூர் (விழுப்புரம்), கீழ் கோதையார் ARG (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி), வேலூர், ஆம்பூர் (திருப்பத்தூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), பென்னாகரம் (தருமபுரி), மேமாத்தூர் (கடலூர்), தழுதலை (பெரம்பலூர்), மேலாளத்தூர் (வேலூர்), குப்பநத்தம் (கடலூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), காரைக்கால், திருப்பத்தூர், தரங்கம்பாடி (மயிலாடுதுறை), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி), அஞ்சட்டி (கிருஷ்ணகிரி), அரண்மனைப்புதூர் (தேனி), கொடைக்கானல் (திண்டுக்கல்), சங்கரிதுர்க் (சேலம்), கடலூர்), ஆர்எஸ்எல்-2 கோலியனூர் (விழுப்புரம்), தளி (கிருஷ்ணகிரி), வேதநத்தம் (தூத்துக்குடி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), திருவண்ணாமலை, பாலவீதி (கரூர்), காட்பாடி (வேலூர்), ஆர்எஸ்எல்-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), வால்பாறை PTO  (கோயம்புத்தூர்), சீர்காழி (மயிலாடுதுறை), விழுப்புரம்,  சேந்தமங்கலம் (நாமக்கல்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), டேனிஷ்பேட்டை (சேலம்), ஆனைமடுவு அணை (சேலம்), ஆர்எஸ்எல்-2 வளவனூர் (விழுப்புரம்), புவனகிரி (கடலூர்), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), ஓசூர் (கிருஷ்ணகிரி), ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), வீரபாண்டி (தேனி) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை.

சமீபத்திய வானிலை தகவல் பற்றி மேலும் தெரிந்துகொள்ள mausam.imd.gov.in/chennai   இணையதளத்தை காணவும். 

மேலும் படிக்க | தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News