தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய 12,000 சோதனை கிட்கள் வந்தன

தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய 12 ஆயிரம் சோதனை கிட்கள் வந்துள்ளன.

Last Updated : Apr 18, 2020, 11:37 AM IST
தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய 12,000 சோதனை கிட்கள் வந்தன title=

இந்த நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் வெடிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை, நாடு முழுவதும் சுமார் 14,000 வழக்குகள் பதிவாகியுள்ளன, சுமார் 500 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றில் இந்தியாவில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்றுவரை 1323 ஆக அதிகரித்துள்ளது. 15 பேர் மரணமடைந்துள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று அறியும் சோதனையை விரைவுபடுத்தும் ஸ்க்ரீனிங் டெஸ்ட்டுக்கான ரேபிட் கிட் கருவிகள் மத்திய அரசு தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு 12000 ரேபிட் கிட்கள் அனுப்பப்பட்டு சென்னை வந்து சேர்ந்தது. சீனாவிலிருந்து இந்தியா வந்த 24000 ரேபிட் கிட்டுகளையும் சேர்த்து 36000 கிட்டுகள் உள்ளன. இந்த ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் மூலம் கொரோனா சோதனை முடிவுகளை விரைவாக அறிய முடியும்.

கொரோனா பரிசோதனைக்கான 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் (ஆர்.டி.) உபகரணங்கள் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு நேற்று வந்து சேர்ந்தன. தமிழகத்திற்கு ஆர்.டி. கிட் (ரேபிட் டெஸ்ட் கிட்) வழங்க வேண்டும் என முதல் அமைச்சர் பழனிசாமி மத்திய அரசுக்கும் வேண்டுகோள் விடுத்த நிலையில், 12 ஆயிரம் கிட்கள் சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்தடைந்து உள்ளன.

Trending News