செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியால் பொற்காலம்! பணவரவு! நல்லகாலம் பொறக்குது!!!

Mangal Gochar Sep 30 : தைரியம், வலிமை, ஆற்றல், வேகம் என தலைமைப்பண்புகளை வழங்கும் அங்காரகன், குருவின் நட்சத்திரத்திற்குள் செப்டம்பர் மாதம் 30ம் தேதியன்று பெயர்ச்சியாகிறார்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 24, 2024, 09:02 PM IST
  • குருவின் நட்சத்திரத்திற்கு குடிபோகும் செவ்வாய்!
  • புனர்பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் செவ்வாய் பகவான்
  • செவ்வாய் யாருடன் இணைந்தால் தோஷம்?
செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியால் பொற்காலம்! பணவரவு! நல்லகாலம் பொறக்குது!!! title=

ராமரின் நட்சத்திரத்திற்குள் செல்லும் செவ்வாய்!  ராமர் பிறந்த நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரத்தில் செவ்வாய் கிரகம் பெயர்ச்சியாகவுள்ளது. குருவின் நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரம், அழகு, தலைமைப்பண்பு தூய்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது. தைரியம், வலிமை, ஆற்றல், வேகம் என தலைமைப்பண்புகளை வழங்கும் அங்காரகன், குருவின் நட்சத்திரத்திற்குள் செப்டம்பர் மாதம் 30ம் தேதியன்று நுழைவதால் 12 ராசிகளுக்கும் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படும்.  

செவ்வாய் கிரகம் அசுப கிரகமாக இருந்தாலும், அவர் பாவ கிரகங்களான ராகு, கேது மற்றும் சனியுடன் சேர்ந்தால் தான் தோஷத்தை ஏற்படுத்துவார். பொதுவாக சனியுடன் சேர்ந்த செவ்வாயால் ஏற்படும் தோஷத்திற்கு நரசிம்மர் வழிபாடு செய்தால், இந்த இரு கிரகங்களின் கூட்டணியால் ஏற்படும் பாதிப்புகள் பெருமளவில் குறையும்.

அதேபோல, செவ்வாயுடன் ராகு கூட்டணி வைத்தால், செவ்வாய்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதேபோல, கேதுவும் செவ்வாய் இணைந்திருந்தால், அந்த ஜாதகர் செவ்வாய் கிழமை விரதம் இருந்து வீரபத்திரரை வழிபட்டால் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகும்.

அதுமட்டுமல்ல, செவ்வாய்தோஷம் என்பது, செவ்வாய் பாவ கிரகங்களோடு சேரும் போது மட்டும்தான் என்பதையும், சுப கிரகங்களின் தொடர்பு ஏற்படும் போது தோஷத்தை ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், செப்டம்பர் மாதம் 30ம் தேதியன்று செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி அடைவதால் யாருக்கு லாபம் என்பதைத் தெரிந்துக் கொள்வோம். 

மேலும் படிக்க | சொந்த ராசியில் உச்சமான புதன்! சூரியனுடன் சேரும் நெருப்பு கிரகத்தின் 12 ராசிகளுக்கான கன்னி புதன் ராசிபலன்!

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி பண வரவைத் தரும். பணத்தை சரியாக கையாளாவிட்டால், சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேலை விஷயங்களில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். தொழிலிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

சிம்மம்

அதிக புத்திசாலித்தனத்தை காட்டுவதால் பலரும் உங்களுக்கு மரியாதை கொடுப்பார்கள். அதுவே உங்களுக்கு நல்ல கெளரவத்தைத் தேடிக் கொடுக்கும். இந்த மாதம் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதகமான மாதம். வெளிநாட்டு மூலங்களிலிருந்து பணம் வந்து சேரலாம், வியாபாரம் கூடும். இந்த மாதம் காதல் உறவுகளுக்கு சாதகமாக இருக்கும். மாதத்தின் பிற்பகுதி, எல்லாவிதங்களிலும் சாதகமாக இருக்கும்.

விருச்சிகம்

மாணவர்களுக்கு இந்த மாதம் நன்றாக இருக்கும், கடினமாக உழைத்த உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். படிப்பில் நல்ல பலன்களை பெற முடிவதால், குடும்பத்தின் கவனிப்பும் பாசமும் அதிகமாகும். செவ்வாயின் நட்சத்திரப் பெயர்ச்சியால் விருச்சிக ராசியினருக்கு பண வரத்து அதிகமாகும். 

தனுசு ராசி

புனர்பூச நட்சத்திரத்தில் அங்காரகன் சஞ்சாரம் நிகழும் காலத்தில் மிக சிறப்பான பலன்கள் கிடைக்கும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். வெற்றியின் உச்சத்தை எட்டப் போகும் வாய்ப்பை செவ்வாய் நட்சத்திரப் பெயர்ச்சி ஏற்படுத்திக் கொடுக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | அக்டோபரில் செவ்வாய்ப் பெயர்ச்சி! முருகனை கும்பிட்டால் இரட்டிப்பு பலன்களைப் பெறும் ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News