Sarfaraz Khan Latest News : இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க நீண்டகாலமாக போராடிக் கொண்டிருக்கிறார் சர்பிராஸ்கான். இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டாலும் அவருக்கு விளையாடும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுப்பதில்லை. மாறாக பெஞ்சிலேயே உட்கார வைக்கப்படுகிறார். வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் அவர் சேர்க்கப்பட்டிருந்தாலும், விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படவில்லை. இப்போது அந்த அணிக்கு எதிரான செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கும் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சர்பிராஸ்கான் பெயர் சேர்க்கப்பட்டாலும், அவர் பிளேயிங் லெவனில் உறுதியாக சேர்க்கப்படுவாரா? என்பது தெரியவில்லை. இந்நிலையில் சர்பிராஸ்கான் குறித்து முக்கிய அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதில், வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் சர்பிராஸ்கான் சேர்க்கப்படாவிட்டால், உடனடியாக ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிராக விளையாடும் மும்பை அணியில் சேர்க்கப்படுவார். அதில் அஜிங்கியா ரஹானே தலைமையில் சர்பிராஸ்கான் ரெஸ்ட் ஆப் இந்தியா அணியை எதிர்த்து விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சர்பிராஸ்கான் கான்பூர் டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது. ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியில் அவரது பெயர் உறுதியாக இடம்பெறும் என்பதும் பிசிசிஐ இந்த அறிவிப்பின் மூலம் உறுதியாகியுள்ளது.
இதேபோல், வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள யாஷ் தயாள் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோரும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் இடம்பிடித்துள்ளனர். ஒருவேளை அவர்கள் கான்பூர் டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கவில்லை என்றால் யாஷ் தயாள், துருவ் ஜூரல் ஆகியோரும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்காக இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட இருக்கின்றனர்.
ரெஸ்ட் ஆப் இந்தியா மற்றும் ரஞ்சி கோப்பை சாம்பியன் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னோவில் நடைபெற இருக்கிறது. ரெஸ்ட் ஆப் இந்தியா அணியை ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக வழிநடத்த இருக்கிறார். மும்பை அணியில் ஷர்துல் தாக்கூர், ஸ்ரேயாஸ் ஐயர், முஷீர் கான், ஷம்ஸ் முலானி, தனுஷ் கோட்யான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அனைவரும் இந்தப் போட்டியில் விளையாட உள்ளனர். அதேபோல், ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் ருதுராஜ் கெய்க்வாட், அபிமன்யு ஈஸ்வரன் சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், இஷான் கிஷன் ஆகியோர் விளையாட உள்ளனர். ஷிவம் துபே, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருப்பதால் அவர்கள் இந்த போட்டியில் விளையாடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ