தவெக மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு... விஜய்யின் முக்கிய அறிவுரை - மழை நிலவரம் என்ன?

Tamilaga Vetri Kazhagam: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை (அக். 27) நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியிருக்கிறார்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 26, 2024, 11:59 AM IST
  • விழுப்புரம் வி.சாலையில் பிரம்மாண்ட முறையில் மாநாடு நடைபெறுகிறது.
  • இந்த மாநாட்டில் விஜய் உரையாற்ற உள்ளார்.
  • மாநிலம் முழுவதும் இருந்து கட்சி தொண்டர்கள் இதற்கு வருவார்கள் என எதிர்பார்ப்பு.
தவெக மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு... விஜய்யின் முக்கிய அறிவுரை - மழை நிலவரம் என்ன? title=

Tamilaga Vetri Kazhagam Maanadu: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சியை தேர்தல் ஆணையத்திலும் அவர் பதிவு செய்தார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதை திட்டமாக வைத்து இக்கட்சியை தொடங்கியிருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக். 27ஆம் தேதி (நாளை) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சாலையில் நடைபெறுகிறது. 

விஜய்யின் முக்கிய அறிவுரை

இந்நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் (TVK President Vijay), தொண்டர்களுக்கு இன்று அவரது X தளம் மூலம் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,"பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன். காரணம், எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம். ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். 

இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன். அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து 
காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள். அப்படித்தான் வரவேண்டும். நாளை (அக். 27) நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்" என குறிப்பிட்டிருந்தார். 

குவியும் போலீசார்

தமிழக வெற்றி கழக மாநாடு பாதுகாப்பு பணியில் ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி அஸ்ராகார்க் தலைமையில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி திஷாமித்தல் மேற்பார்வையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாஜி உள்ளிட்ட 10 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், 15 கூடுதல் எஸ்பிக்கள், 50 மேற்பட்ட டிஎஸ்பிக்கள், 200க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 5 ஆயிரம் பேர் மாநாடு போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் போக்குவரத்து சரி செய்வதற்கு என்று தனியாக 600 போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மழை வருமா?

இருப்பினும், முன்னர் விக்கிரவாண்டியில் மழை இருக்கலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது வரை அங்கு மழைக்கான அறிகுறி இல்லை. மேலும், மாநாடு நடைபெறும் வேளையில் அங்கு மழை பெய்ய வாய்ப்பிருக்காது என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக வட மாவட்டங்களில் நாளைக்கு மழை வாய்ப்பு இல்லை என்பதால் விக்கிரவாண்டியிலும் பிரச்னை இருக்காது என கூறப்படுகிறது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News