காவல்துறையின் அனுமதியின்றி குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட முடியாது: நீதிமன்றம் காட்டம்

முன்ஜாமீன் கோரிய குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டனர் என்ற காவல்துறையின் அறிக்கை ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 28, 2022, 12:36 PM IST
  • கைது செய்யாத காரணத்தினால் தான் குற்றவாளிகள் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யும் நிலை ஏற்படுகிறது: நீதிபதி
  • காவல்துறையினருக்கு தெரியாமல் குற்றவாளிகள் தப்பித்து தலைமறைவாக முடியாது: நீதிபதி
  • குற்றவாளிகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரடியாக தலையிட்டு கைது செய்ய வேண்டும்: நீதிபதி
காவல்துறையின் அனுமதியின்றி குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட முடியாது: நீதிமன்றம் காட்டம் title=

அடிதடி வழக்கு , சீட்டு மோசடி , குட்கா பொருள் விற்பனை, மணல் திருட்டு , மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் முன்ஜாமீன் கோரிய வழக்கில் 

உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. முன்ஜாமீன் கோரிய மனுதாரர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலையிட்டு கைது செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறையின் அனுமதி இன்றி குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட முடியாது என்றும் குற்றவாளிகள் காவல்துறையினருக்கு தெரியாமல் தப்பித்து தலைமறைவாக முடியாது என்றும்  நீதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

முன்ஜாமீன் கோரிய குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டனர் என்ற காவல்துறையின் அறிக்கை ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. 

அடிதடி வழக்கு , சீட்டு மோசடி , குட்கா பொருள் விற்பனை, மணல் திருட்டு , மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியபட்டுள்ளவர்கள் மதுரை திருச்சி திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பலர் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். முன் ஜாமின் மனுக்களில் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்பதாகவும் தெரிவித்திருந்தனர்.

மேலும் படிக்க | Live Update: மே 28, 2022: இன்றைய முக்கிய செய்திகள் 

இந்த மனு நீதிபதி பி. வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வழக்குப்பதிவு செய்து நீண்ட நாட்கள் ஆகியும் போலீசார் ஏன் இதுவரையில் யாரையும் கைது செய்யவில்லை. கைது செய்யாத காரணத்தினால் தான் அவர்கள் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யும் நிலை ஏற்படுகிறது. இந்த மனுக்கள் தாக்கல் செய்யும் வரை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். பின்னர்,  சம்பந்தப்பட்ட மனுதாரர்களை உடனடியாக கைது செய்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதன் அறிக்கையை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அனைத்து வழக்குகளிலும் முன்ஜாமீன் கோரிய நபர்கள் தற்போது தலைமறைவாகி விட்டனர் என போலீசார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதி குற்ற செயல்களில் ஈடுபட்டு வழக்கறிஞர்கள் மூலம் மனு தாக்கல் செய்கின்றனர், அதுவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. தற்போது நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு குற்றவாளிகள் தலைமறைவாகி விட்டதாக போலீசார் கூறுவது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகின்றது என்று தெரிவித்தார்.

குற்றவாளிகள் காவல்துறையின் ஒத்துழைப்போடு தான் தலைமறைவாகினர். காவல் துறைக்கு தெரியாமல் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. எனவே காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல் திருப்தி அளிக்கவில்லை. குற்றவாளிகள் காவல்துறைக்கு தெரியாமல் சுதந்திரமாக நடமாட முடியாது. எனவே சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரடியாக தலையிட்டு கைது செய்து உரிய நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | எடப்பாடிக்கு எதிராகும் ஜெயக்குமார்? எண்ட்ரிக்கு காத்திருக்கும் சசிகலா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News