கொரோனா முழு அடைப்பால் வேலை இன்றி தவித்து வரும் தமிழக மக்களுக்கு உதவும் விதமாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவுதல் தடுக்கும் முயற்சியாக அமுல்படுத்தப்பட்ட நாடு தழுவிய முழு அடைப்பு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்றும் முழு அடைப்பு விதிகளில் தளர்வுகள் ஏதும் இருக்காது என தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவது தொடர்பான பிரச்சனைகளை தமிழக மக்கள் தற்போது சந்தித்து வருகின்றனர்.
READ | சர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்ற காலஅவகாசம் நீட்டிப்பு!
இந்நிலையில் வீட்டில் முடங்கியிருக்கும் மக்களுக்கு உதவும் விதிதமாக, அவர்களது வீட்டிற்கே ரேஷன் பொருட்களை அனுப்பும் முயற்சியில் தமிழக அரசு களமிறங்கியுள்ளது. மற்றும் இந்த முழு அடைப்பு காலத்தில் வேலை இன்றி தவித்து வரும் தமிழக மக்களுக்கு உதவும் விதமாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் பொதுமக்கள் கூட்டமாக வெளியே வருவதை தடுக்கும் பொருட்டும், ரேஷன் பொருட்களை வாங்க ஏதுவாக மே 2 மற்றும் மே 3 ஆகிய தேதிகளில் டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த கூடுதல் அரசி அறிவிப்பு ஏப்ரல் முதல் ஜூன் வரை 3 மாதங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
READ | குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் ரேஷன் வழங்கப்பட வேண்டும்...
முன்னதாக, பொதுமக்களுக்கு 500 ரூபாய் விலையில் 19 வகையான மளிகைப் பொருட்கள் ரேசன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் ரேசன் கடைகளில் 500 ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் விற்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.