Alcohol: மதுபானத்துடன் இந்த “5” பொருட்களை சாப்பிடவே கூடாது..!!!

ஆல்கஹால் குடிப்பதால் புற்றுநோய் முதல் பல தீவிர நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதோடு கூட, மதுவுடன் எடுத்துக் கொள்ளும் சிற்றுண்டிகளும் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 7, 2021, 02:20 PM IST
Alcohol: மதுபானத்துடன் இந்த “5” பொருட்களை சாப்பிடவே கூடாது..!!!

ஆல்கஹால் (Alcohol) அல்லது மதுபானங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தும், பலர் மது அருந்துகிறார்கள். ஆல்கஹால் குடிப்பதால் புற்றுநோய் முதல் பல தீவிர நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதோடு கூட, மதுவுடன் எடுத்துக் கொள்ளும் சிற்றுண்டிகளும் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஆல்கஹால் கூட சாப்பிடக்கூடாத விஷயங்கள் எவை என்பதை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

1. பொரித்த உணவுகள் 

பொரித்த உணவில் சாசுரேடட் கொழுப்பு அதிகம் உள்ளது. பொதுவாகவே அதை எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதிலும் மது அல்லது பீர் எடுத்து கொள்வதால் ஜீரணிப்பது மேலும் கடினமாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.  இதனால், இரண்டையும் ஒன்றாக உட்கொள்வது வயிற்று வலியை ஏற்படுத்தலாம். இதில் உள்ள சோடியம் உங்கள் உடலில் நீர் சத்து இழப்பை ஏற்படுத்தும். இது உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கும் வழிவகுக்கும்.

 ALSO READ | Protein deficiency: உடலில் புரத சத்து குறைபாட்டின் ஆபத்தான அறிகுறிகள்

2 சாக்லேட் (Choclate)

சாக்லேட்டில் கொழுப்பு, கோகோ மற்றும் காஃபின் ஆகியவை அதிகம் உள்ளது. அதை பீர் உடன் உட்கொள்வது உங்களை அதிக போதையை  ஏற்படுத்தும். மேலும் தாகம் அதிகம் ஏற்படும்.

3. பர்கர் (Burger)

மது அருந்தும் போது அதனுடன் பர்கர் சாப்பிட கூடாது என வால்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.  அவ்வாறு சாப்பிடும் போது, அதை ஜீரணிக்க கல்லீரல் கடுமையாக உழைக்க வேண்டும்  என்பதோடு,  அதிலிருந்து வெளியாகும் கொழுப்பு திசுக்களில் படிந்துவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!  

4. சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை மது அருந்தும்போது தவிர்க்க வேண்டும். சிட்ரஸ் பழங்களில் அதிக அமிலம் உள்ளது. இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால், சிட்ரஸ் பழங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது.

5. காரமான உணவுகள்

ஆல்கஹாலுடன் காரமான உணவை ஒருபோதும் சாப்பிட கூடாது.  ஆல்கஹால் மற்றும் கார உணவுகளின் கலவையானது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. இவை கேடு விளைவிக்கும். காரமான உணவில் கேப்சைசின் உள்ளது. இதனால், ஹீட் பர்ன் எனப்படும் உடல வெப்பதினால் ஏற்படும் புண்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ALSO READ | குழந்தையின் மூளை ஜெட் வேகத்தில் இயங்க வேண்டுமா; இந்த ‘6’ உணவுகளை கொடுக்கவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News