நீட் விலக்கு சட்ட வரைவினை குறித்து மத்திய அரசு ஆலோசனை!

Last Updated : Aug 16, 2017, 02:31 PM IST
நீட் விலக்கு சட்ட வரைவினை குறித்து மத்திய அரசு ஆலோசனை! title=

நீட் தேர்வில் தொடர்பாக தமிழக அரசின் விலக்கு கோரும் சட்ட வரைவினை மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க மத்தியரசு உதவும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கடந்த திங்களன்று டெல்லி சென்ற சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழக அரசின் சட்ட வரைவை மத்திய அரசிடம் சமர்ப்பித்தார். 

இந்த வரைவை ஏற்ற உள்துறை அமைச்சகம் தற்போது இந்த சட்ட வரைவை குறித்து தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் நாளைக்குள் இது தொடர்பான முடிவு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Trending News