தாயகம் திரும்பும் தமிழர்களின் மருத்துவப் பரிசோதனை செலவை அரசு ஏற்பதே சரி: MKS

தாயகம் திரும்பும் தமிழர்களின் மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Last Updated : Jul 5, 2020, 02:02 PM IST
    1. வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் தமிழர்களின் மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
    2. சென்னையில் இதுவரை 66,538 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1033 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்
தாயகம் திரும்பும் தமிழர்களின் மருத்துவப் பரிசோதனை செலவை அரசு ஏற்பதே சரி: MKS title=

வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் தமிழர்களின் மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வெளிநாடுவாழ் தமிழர்களின் நிலையினைப் புரிந்து தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

தமிழகத்ததில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நான் அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனா தொற்றால் பலியாவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு பட்டியல் படி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 11 பேர், ஓமந்தூரார், ஸ்டான்லி மருத்துவமனைகளில் தலா 5 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேர், தனியார் மருத்துவமனையில் 26 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

READ | சென்னையில் COVID-19-க்கு சிகிச்சை பெற்று வருபவர் எண்ணிக்கை; மண்டல வாரியாக,..

தற்போதைய நிலவரப்படி சென்னையில் இதுவரை 66,538 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1033 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்., 41,309 பேர் கொரோனா தொற்றில் இருந்து விடுப்பட்டுள்ளனர். 

இதற்கிடையில் திமுக தலைவர் முக ஸ்டாலின், தாயகம் திரும்பும் தமிழர்களின் மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடுவாழ் தமிழர்களின் நிலையினைப் புரிந்து தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

 

READ | ஜூலை 6 முதல் சென்னையில் புதிய கட்டுப்பாடுகள், சில தளர்வுகள் அறிவிப்பு..!

”வந்தே பாரத்’ திட்டத்தில்  தமிழகத்திற்கு போதுமான விமானச் சேவைகள் நடைபெறவில்லை. "அயல்நாடுகளில் வசிக்கும் அண்டை மாநில மக்களை மீட்க மாநில முதல்வர்கள் மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் நிலையில் தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை" . "வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் கொரோனா பாதிப்பினால் பரிதவிக்கின்றனர், அவர்களை மீட்கும் முயற்சிகளில் அதிமுக அரசு அக்கறை காட்டவில்லை" என்றும் முக ஸ்டாலின் குற்றம்சாட்டினார். 

Trending News