பெரும்பான்மை குறைந்தால் கவர்னரை சந்திப்பேன்: ஸ்டாலின்

Last Updated : Jun 9, 2017, 01:33 PM IST
பெரும்பான்மை குறைந்தால் கவர்னரை சந்திப்பேன்: ஸ்டாலின் title=

தமிழக சட்டசபையில் ஆளும் கட்சியான அதிமுகவுக்கு பெரும்பான்மை குறைந்தால் கவர்னரை சந்திப்போம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கோவூர் குளம் தூர் வாரும் பணியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்:-

தமிழக அரசின் குளம் தூர்வாரப்படுகிறது. தமிழக அரசை பாஜக ஆட்டுவிப்பதை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி செய்துள்ளார். ஆட்சியை தக்க வைப்பதில் தான் அதிமுக-வின் கவனம் முழுவதும் உள்ளது. 

தமிழக சட்டசபையில் ஆளும் கட்சியான அதிமுகவுக்கு பெரும்பான்மை குறைந்தால் கண்டிப்பாக நான் கவர்னரையும், தேவைப்பாட்டால் ஜனாதிபதியையும் சந்திப்போம்.'' என கூறினார்.

Trending News