தென்கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது!!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பகலில் வெப்பம் அதிகரித்து வருகிறது. அந்த வேப்பசலனம் காரணமாக சென்னையின் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. தற்போது, மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. தென் தமிழக கடல் பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்..!
தென்மேற்கு திசையில் சுமார் 35 கி.மீ முதல் 55 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்றும் காற்றின் வேகம் காரணமாக கடல் அலைகள் சுமார் 3.5 கி.மீ முதல் 3.7 கி.மீ வரை மேல் எழும்பும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால், தென்கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது!!