பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும்: TN Govt

கொரோனாவை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை!!

Last Updated : Aug 20, 2020, 01:15 PM IST
பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும்: TN Govt title=

கொரோனாவை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை!!

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும், பொதுமக்கள் நலன் கருதி தடை செய்யப்பட்டு ஏற்கெனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த தமிழக அரசு தடை விதித்தது. வீடுகளில் சிறிய அளவில் சிலை வைத்து வழிபாடு செய்யலாம் என்று கூறியது. BJP, RSS அமைப்புகள் அரசின் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. வழிபடத்தான் அனுமதி கேட்கிறோம் ஊர்வலமாக செல்லமாட்டோம் என்று கூறி வருகின்றனர் இந்து முன்னணியினர்.

ALSO READ | கழிப்பறை கோப்பைக்குள் இருந்த விஷ பாம்பு.... பார்காமல் அமர்ந்த ஆண்..!

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்.... "22.8.2020 அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 29.7.2020 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி, மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகள் ஆகியவை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாநிலத்தில் கொரோனா தொற்றினால் நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா நோய் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும், பொதுமக்கள் நலன் கருதி தடை செய்யப்பட்டு ஏற்கெனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending News