உனக்காக இருப்பேனே எனதழகா - தட்டிக்கொடுத்த நயன்... விக்னேஷ் சிவன் பகிர்ந்த க்யூட் வீடியோ

விக்னேஷ் சிவன் முதுகில் நயன்தாரா தட்டிக்கொடுக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 29, 2022, 05:03 PM IST
  • விக்னேஷ் சிவன் பகிர்ந்த வீடியோ வைரல்
  • கலவையான விமர்சனங்களை பெற்ற காத்துவாக்குல ரெண்டு காதல்
உனக்காக இருப்பேனே எனதழகா - தட்டிக்கொடுத்த நயன்... விக்னேஷ் சிவன் பகிர்ந்த க்யூட் வீடியோ title=

நானும் ரௌடிதான் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் ஒன்றாக பயணித்துவருகின்றனர். ஒரே வீட்டில் தங்கியிருக்கும் விக்னேஷுக்கும், நயனுக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்ற கேள்வி அவரது ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. 

இதற்கிடையே அவர்கள் இருவருக்கும் இந்த வருடத்திற்குள் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | ’காதல்’ குறித்து மௌனம் கலைத்த சமந்தா

இந்தச் சூழலில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் நேற்று வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்துவருகின்றனர்.

 

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து நயன்தாராவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த வீடியோ விக்னேஷ் சிவனின் முதுகில் நயன்தாரா தட்டிக்கொடுக்கிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் விக்னேஷ் சிவனுக்கு பக்கபலமாக நயன் இருக்கிறார் என கமெண்ட் செய்தும், ஷேர் செய்தும்வருகின்றனர். 

மேலும் படிக்க | ஊரெல்லாம் ‘ஸ்வர்ணலதா’ பாட்டு உள்ளத்தை மீட்டுது...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News