தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - எடப்பாடி பழனிச்சாமி!

திராவிட மாடல் ஆட்சியில் காரில் வந்து செயின் பறிக்கின்றனர். குற்றத்தை கண்டுபிடிக்க வேண்டிய காவல்துறையினரே குற்றம் செய்கின்றனர் என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jun 10, 2023, 09:45 AM IST
  • அதிமுக ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலமாக இருந்தது.
  • தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
  • இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - எடப்பாடி பழனிச்சாமி!  title=

திமுக இரண்டு ஆண்டு ஆட்சி காலத்தில் லஞ்சம் மட்டுமே வளர்ச்சி பெற்று உள்ளதாகவும், இனி வீதியில் நடந்து சென்றாலே வரி செலுத்தும் நிலை வரும் என சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.  சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சின்னமுத்தூரில் அதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது. எடப்பாடி நகரச்செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கழக கொடியை ஏற்றி வைத்தார்.  இதனை தொடர்ந்து, விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது,  தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் விற்பனை, அதனால் ஏற்படும் வன்முறைகள், கொலைகள் போன்ற செய்திகளே டிவியில் வருகிறது. அதிமுக ஆட்சிதான் தமிழகத்தின் பொற்காலமாக இருந்தது. 2 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சி தந்துள்ளதாக முதல்வர் சொல்கிறார்.  ஆனால் இரண்டு ஆண்டுகளில் லஞ்சம் மட்டுமே வளர்ச்சி பெற்றுள்ளது. அனைத்து துறையிலும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்கிற நிலை உள்ளது.

மேலும் படிக்க | அடுத்த ஆண்டு ஜனவரி 16 முதல் சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி

இதுதான் திராவிட மாடல் ஆட்சி. மக்களுக்கான எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தது அதிமுகதான். 100 யுனிட் இலவச மின்சாரம் கொடுத்தது அதிமுக அரசு; ஆனால் திமுக ஆட்சியில் 52 சதவீதம் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் மாதந்தோறும் மின்கணக்கீடு செய்யப்படும் என்றார். ஆனால் இதுவரை செய்யவில்லை. வீட்டு வரி 100 சதவீதம் உயர்வு, குப்பைக்கு கூட வரி வசூல் செயகின்றனர். இனி வீதியில் நடப்பதற்கு கூட வரி விதித்து விடுவார்கள் என்றார்.  தொடர்ந்து பேசிய அவர், 30 ஆயிரம் கோடி ஊழல் பணம் வசூல் செய்த அரசு திமுக அரசு. இதை நான் சொல்லவில்லை நிதித்துறை அமைச்சரே சொல்கிறார். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக திறந்து வைக்கிறது.  அதிமுக பெற்ற பிள்ளைகளுக்கு திமுக பெயர் வைக்கிறது; அதிமுக கொண்டுவந்த திட்டங்களை வேண்டும் என்றே 2 ஆண்டுகள் காலம் தாழ்த்தி தற்போது ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார்.

திமுக அரசு 2 ஆண்டுகளில் செய்த சாதனை மக்கள் வரிப்பணத்தில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டியதுதான். அம்மா உணவகத்திற்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்திற்கு ஒரு திட்டத்தை கூட கொண்டுவரவில்லை. 6 ஆயிரம் பிராந்தி கடையில் 4 ஆயிரம் பிராந்தி கடைகள் 2 ஆண்டுகளாக வரி செலுத்தாமல் செயல்பட்டுள்ளனர். இதன் மூலம் 20 ஆயிரம் கோடி மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதிமுக கேள்வி கேட்ட பின்னர் கண்துடைப்புக்கு சிலவற்றிற்கு சீல் வைத்தனர். பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வேண்டும் என வெளிப்படையாக கேட்கிறார்கள்.  கஞ்சா போதையில் சிறுவர்கள் என்ன செய்கிறோம் என தெரியாமல் தவறு செய்கின்றனர். திராவிட மாடல் ஆட்சியில் காரில் வந்து செயின் பறிக்கின்றனர். குற்றத்தை கண்டுபிடிக்க வேண்டிய காவல்துறையினரே குற்றம் செய்கின்றனர். சாப்பிட்ட உணவுக்கு காசு கொடுக்காமல் தகராறு செய்கின்றனர். அதிமுக ஆட்சியில் தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறை போல இருந்தது. திமுக அரசாங்கம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறி விட்டது. தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம்; ஸ்டாலின் குடும்பத்துக்கு யாரும் இதை பட்டா போட்டு தரவில்லை என தெரிவித்தார்.

மேலும் படிக்க | கருணாநிதி நினைவகம் ஆகஸ்டு 7-ந் தேதி திறப்பு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News