கோவிலில் உண்டியலை உடைத்து ரூ. 50 ஆயிரம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை

நகரத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள கோயிலில் நடந்துள்ள திருட்டு சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 14, 2022, 01:05 PM IST
கோவிலில் உண்டியலை உடைத்து ரூ. 50 ஆயிரம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை title=

திருப்பத்தூர் மாவட்டம்: திருப்பத்தூர் அடுத்த பஜார் தெருவில் பிரசித்தி பெற்ற  ஸ்ரீ அருள்மிகு தண்டபாணி திருக்கோயில் அமைந்துள்ளது.

நேற்று இரவு கோபுரத்தின் மேலே உள்ள மணிகூண்டு மேல் பகுதியை கத்திரிக்கோல் பயன்படுத்தி அதனை துண்டித்து அதன்  வழியாக உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் இரண்டு உண்டியல்களை உடைத்து உள்ளிருந்த ரூபாய் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

அதேபோல் முருகப்பெருமானின் (Lord Murugar) பூஜை மற்றும் அலங்காரங்களுக்கு பயன்படும் பூஜை உபகரணங்கள் மற்றும் சிசிடிவி கேமரா ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையடித்து  சென்றுள்ளனர்.

அது மட்டுமன்றி பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த அலாரம் ஒயரை வெட்டி மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கோவில் நிர்வாகிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்து அறநிலை கட்டுப்பாட்டில் இருக்கும் மாடப்பள்ளி, ஜலகாம்பாறை, உள்ளிட்ட கோவில்களில் அடிக்கடி திருடு (Robbery) போவது குறிப்பிடத்தக்கது.

 மேலும் இக்கோயில் நகரத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது. இத் திருட்டு சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி

ALSO RAED | மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறும் காளைகள்... அடக்கும் காளையர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News