’ஆட்சியிலும் பங்கு வேண்டும்’ திருமாவளவன் பகிர்ந்த வீடியோ, உடனே நீக்கம்

ஆட்சியிலும் பங்கு வேண்டும் என பேசிய பழைய வீடியோ தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த திருமாவளவன் அதனை உடனே நீக்கினார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 14, 2024, 02:21 PM IST
  • திருமாவளவன் பகிர்ந்த பழைய வீடியோ
  • ஆட்சியில் பங்கு வேண்டும் என கோரிக்கை
  • இருமுறை பகிர்ந்த வீடியோ திடீரென நீக்கம்
’ஆட்சியிலும் பங்கு வேண்டும்’ திருமாவளவன் பகிர்ந்த வீடியோ, உடனே நீக்கம் title=

திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என கேட்கும் பழைய வீடியோவை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துவிட்டு அதனை உடனே நீக்கியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. 2019 ஆம் ஆண்டு முதல் இந்தக் கூட்டணியில் இருக்கும் அவருடைய கட்சி, 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் கடந்த மே மாதம் நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணியிலேயே அங்கம் வகித்தார். இப்போதும் திமுக கூட்டணியில் தொடர்ந்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை அடுத்தக்கட்டத்தை நோக்கி எடுத்தும் செல்லும் வேளைகளில் இறங்கியுள்ளார். 

மேலும் படிக்க | சிறுவன் மீது மது போதையில் தாக்குதல்... தலைமறைவான பாடகர் மனோவின் மகன்கள் - நடந்தது என்ன?

அதன்தொடர்ச்சியாக அக்டோபர் 2 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்த இருக்கிறது. இதில் பங்கேற்க வருமாறு அதிமுகவுக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். பாமக, பாஜகவைத் தவிர அனைத்து கட்சிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கும் திருமாவளவன், இது குறித்து கட்சியினருடன் கலந்து பேசி மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க வருமாறு தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு கட்சிக்கும் அழைப்பு விடுப்பது குறித்து அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒருவேளை காங்கிரஸ் கட்சிக்கு அவர் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தால் பங்கேற்க வேண்டும் என அக்கட்சி தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்த மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்குமா என்பது குறித்து பதில் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை திருமாவளவன் அழைத்தது வரவேற்புக்குரிய விஷயம், இது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் எனக் கூறினார். இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் தீயாக வெடித்துக் கொண்டிருக்கும் சூழலில் திருமாவளவன் ஆட்சி, அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என பேசிய பழைய வீடியோவை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தது திமுக கூட்டணிக்குள் சலசலப்பை உருவாக்கியுள்ளது. ஒருமுறைக்கு இருமுறை அந்த வீடியோவை பகிர்ந்து நீக்கியுள்ளார் திருமாவளவன். 

அந்த பழைய வீடியோவில் திருமாவளவன் பேசும்போது, " தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு வேண்டும் என பேசிய இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமே. இதற்கு முன்பு எந்த கட்சியும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கேட்டதில்லை. சீட் ஷேர் வேற, அதிகார பகிர்வு என்பது வேறு. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பகிர்வு கொடுக்க வேண்டும்" என பேசியிருக்கிறார். இந்த வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பிய இந்த நேரத்தில் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து நீக்கியுள்ளது, பல்வேறு அரசியல் வியூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. இதற்கு திமுக என்ன ரியாக்ட் செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | அன்னபூர்ணாவில் நான் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை... வானதி கொடுத்த தீடீர் விளக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News