எடை குறைப்பு சிகிச்சையால் உயிரிழந்த திருவண்ணாமலை பெண்மனி!

Updated: Sep 23, 2017, 01:35 PM IST
எடை குறைப்பு சிகிச்சையால் உயிரிழந்த திருவண்ணாமலை பெண்மனி!

உடல் எடையை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!

திருவண்ணாமலை கீழ்நாச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வளர்மதி(46). சென்னை கிழ்பாக்கம் தனியார் மருத்துவமனையில் எடை குறைப்பு அறுவை சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று இரவு அறுவை சிகிச்சை நடைபெற்றது, எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

வளர்மதி ஏற்கனே 150 கிலோ எடைக்குமேல் இருந்ததாலும், அவருக்கு ஆஸ்துமா பிரச்சனை இருந்ததாலும் சிகிச்சை அளிக்காமல் போனதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால் தவாறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் வளர்மதி இறந்ததாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.