Jallikattu: புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் புதுக்கோட்டையில் தொடங்கின...

தமிழகத்திலேயே புத்தாண்டில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

Last Updated : Jan 13, 2022, 04:01 PM IST
  • புதுக்கோட்டையில் புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
  • 2022ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு
  • கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளுடன் போட்டிகள்
Jallikattu: புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் புதுக்கோட்டையில் தொடங்கின... title=

புதுக்கோட்டை: தமிழகத்திலேயே புத்தாண்டில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி மாநிலம் முழுவதும் தைமாதத்தில் நடைபெறுவது வழக்கம்.

அவ்வகையில் தமிழகத்திலேயே அதிக ஜல்லிக்கட்டு (Jallikattu Traditional Event) போட்டி நடைபெறும் இடமாக புதுக்கோட்டை மாவட்டம் திகழ்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 58 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

இந்த புத்தாண்டில், தமிழகத்தில் முதன்முறையாக இன்று, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி சற்று முன் தொடங்கியது.

அதன்படி சற்றுமுன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது அங்குள்ள வாடிவாசல் வழியாக கோவில் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டன அதனை எடுத்து ஒவ்வொரு காளையும் தற்போது அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.

ALSO READ | Bhogi: பழையன கழிதலும், புதியன புகுதலும்! மகர சங்கராந்தி திருநாள்

இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் (Jallikattu Traditional Event) இதுவரை 350 மாடுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது 150 மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடிக்க  தயாராக உள்ளனர்.

jallikattu

மாடுபிடி வீரர்களும், இரண்டு தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்ற ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை துவங்கி வைக்க, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வைத்திருந்தனர். 

முதல் காளையாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது, பின்னர் மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சிறப்பான மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளும், சிறப்பான மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

ALSO READ | 100 இளைஞர்களை கொடுங்கள், இந்தியாவை மாற்றி காட்டுகிறேன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News