தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்பு: மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி அறவழிப் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறப்பது குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தியும் பண்டாரம்பட்டி கிராம மக்கள் சார்பாக இன்று கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 29, 2021, 01:15 PM IST
  • கொரோனாவின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது.
  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
  • உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மக்கள் அறவழிப் போராட்டம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்பு: மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி அறவழிப் போராட்டம் title=

பல நல்ல விஷயங்களுக்காக புகழ்பெற்றிருக்கும் தூத்துக்குடி கடந்த சில காலமாக கலவரங்களுக்கும் கலகங்களுக்கும் பெயர் பெற்று வருவதை நாம் பார்த்து வருகிறோம். யார் கூறுவது சரி, எது தவறு என்பது ஒருபுறம் இருக்க, தன் நிலைப்பாட்டைத் தாண்டி மற்றவர் கூறும் கருத்துக்களைக் கேட்கும் பொறுமை யாருக்கும் இல்லை என்பதற்கும் தூத்துக்குடியில் தற்போது நடக்கும் சம்பவங்கள் நல்ல எடுத்துக்காட்டுகளாக உள்ளன. 

கொரோனாவின் இரண்டாவது அலை தீயாய் பரவி வருகிறது. நாட்டின் பல இடங்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது. மக்கள் பிராண வாயு கிடைக்காமல் மாண்டு போவதைக் காணும் காலம் கூட வரும் என நம்மில் யாரும் எண்ணியிருக்க மாட்டோம். இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்ஸிஜன் தயாரித்து தருகிறோம் என நிர்வாகம் முன்வந்தது.

இது குறித்து நடந்த விவாதங்கள் மற்றும் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், தூத்துக்குடி (Thoothukudi) ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  எனினும், பல உள்ளூர் மக்களுக்கும் பல அரசியல் கட்சிகளுக்கும் இதில் உடன்பாடு இல்லை. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்தும், இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தியும் பண்டாரம்பட்டி கிராம மக்கள் சார்பாக இன்று கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. 

ALSO READ: மீண்டும் திறக்கப்படுகிறது ஸ்டெர்லைட்! தூத்துக்குடியில் பரபரப்பு - போலீசார் குவிப்பு

இந்த ஊர் மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தங்களுடைய நிலைப்பாட்டை பல விதங்களில் வெளிப்படித்தியுள்ளனர். பலர், வீட்டு வாசலில் கோலங்களில், ஆலைக்கு எதிரான வரிகளை எழுதியும், வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆக்ஸிஜன் (Oxygen) என்ற பெயரில் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்தது அந்த ஊர் மக்களுக்கு நல்லதல, அது, அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என மக்கள் கருதுகிறார்கள். தமிழக அரசு சார்பில் கூட்டப்பட அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்யெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களில் ஈட்பட்ட எந்த கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது மக்களின் மிகப்பெரிய குற்றச்சாட்டாக உள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு சார்பில் கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டதின் முடிவை ஏற்க மக்கள் தயாராக இல்லை. இது அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்றே மக்கள் கருதுகிறார்கள். 

மீண்டும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்றும், அதற்கு ஸ்டெர்லைட் ஆலை (Sterlite Plant) போராட்டத்தில் மக்களுடன் சேர்ந்து போராடிய கட்சிகள் அழைக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகிறார்கள். இதையும், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இன்று கருப்பு தினமாக அனுசரிக்கப்படுவதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் மக்கள் கூட்டமைப்பு கூறுகிறது.   

ALSO READ: ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தமிழக அரசை அனுமதிக்க கூடாது: வேதாந்தா நிறுவனம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News