காலம் பேசாது; ஆனால், அதே காலம் தான் பதில் சொல்லும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்!!
சென்னையில் நேற்று சாலமன் பாப்பையா எழுதிய ‘புறநானூறு புதிய வரிசை வகை’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, நடிகர் ரஜினிகாந்த், சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "நான் மும்பையில் ஷூட்டிங்கில் இருந்த போது ராஜா சார் என்னை தொடர்பு கொண்டு இந்த நிகழ்ச்சி பற்றி கூறினார். 30 ஆம் தேதி தான் ஷூட்டிங் முடியும். சீக்கிரம் முடிந்தால், நிச்சயம் வருகிறேன் என கூறினேன். ராமாயணம் எழுதியதால் தான் கம்பருக்கு பெருமை. அதே மாதிரி, இந்த நூலை எழுதியதால் சாலமன் பாப்பையா அவர்களுக்கு மிகப் பெரிய புகழ் வந்துசேரும்.
இந்த நூல் எல்லா இளைஞர்களுக்கு போய் சேரணும். காலம் பேசாது; ஆனால், பதில் சொல்லும். நான் பாப்பையா அவர்களை 'வேலைக்காரன்' பட விழாவில் தான் பார்த்தேன். பாலசந்தர் சார்தான் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆரம்பத்தில் என்னை போல் பேசி ஜாலியா கைத்தட்டல் வாங்கினார். பின்னர் அவர் பேசப்பேச அவர் மொழிநடை அப்படியே மாறிவிட்டது.
கம்பர் பத்தி, ராமாயணம் பத்தி, தமிழ் இலக்கியங்களை பத்தி பேசின அந்த வாய் கொஞ்சம் ரஜினிகாந்த் பத்தியும் பேசுனது எனக்கு பெருமை என அவர் கூறினார்.