கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்த மனைவி..! பின்னணி என்ன?

திருப்பத்தூரில் கூலிப்படையை வைத்து கணவனை கொலை செய்த மனைவி மற்றும் கூலிப்படையினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 7, 2022, 02:08 PM IST
கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்த மனைவி..! பின்னணி என்ன? title=

நாட்றம்பள்ளி தாலுக்கா, வெலக்கல்நத்தம் அடுத்த எம்ஜிஆர் நகர் பகுதியில் அன்பழகன் - சரிதா தம்பதியினர் வசித்து வந்தனர். அன்பழகனுக்கு அப்பகுதியில் வசித்து வந்த சிபிலா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. கணவனின் செயலால் கடும் அதிருப்தியில் இருந்த மனைவி சரிதா, அப்பகுதி ஊராட்சி தலைவரிடம் 12 லட்சம் ரூபாய்க்கு நிலம் வாங்க முடிவெடுத்துள்ளார். அதற்கு கணவனிடம் பணம் கேட்கும்போது, அவர் மறுத்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அவர், தனது தந்தை உதவியுடன் கணவனை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

ALSO READ | பதறவைத்த இரட்டைக்கொலை, பதிலாய் வந்த என்கவுண்டர்: செங்கல்பட்டில் பரபரப்பு

இதற்காக ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமாரை அணுகியுள்ளார் சரிதா. அவரும் சம்மதம் தெரிவித்து சரிதாவை அரவிந்த்குமார் என்பவரிடம் கூட்டிச் சென்றுள்ளார். அவர் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதில் இறுதியாக இரண்டரை லட்சம் ரூபாய்க்கு பேரம் படிந்து முன்பணமாக 35 ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டார் அரவிந்த்குமார். இதனையடுத்து தனது கூட்டாளிகளான சந்தீப், கோபிநாத், பிரதீப் உள்ளிட்டோரை அழைத்துச் சென்ற அரவிந்த்குமார், கடந்த 4 ஆம் தேதி அன்பழகனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். 

ALSO READ | ஜனவரியில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்!

இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு அன்பழகன் மனைவி சரிதா மீதே சந்தேகம் எழுந்தது. அவரிடம் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில், கணவர் அன்பழகனை கூலிப்படை உதவியுடன் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், அவருக்கு உதவிய கூலிப்படையினர் தகவலையும் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், பேசிய பணத்தை கொடுக்க செல்வதுபோல் நாடகத்தை அரங்கேற்றிய காவல்துறையினர், கொலையாளி அரவிந்தனை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த இருவரை பிடித்த காவல்துறையினர், தலைமறைவாக இருக்கும் பிரதீப் மற்றும் கோபிநாத் ஆகியோரை தேடி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News