தமிழக சட்டமன்ற தேர்தல் (TN Assembly Election) வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இதற்காக காவல்துறையினர் வாக்குப்பதிவு செய்யப்படும் இடகளில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 9,000 க்கும் மேற்பட்ட போலீஸ் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு காவல்துறை அதிகாரி கூறுகையில், தமிழகம் (TN Assembly Election) முழுவதும் பாதுகாப்பு பணிக்காக தேர்தல் ஆணையத் தால் 300 கம்பெனி துணை ராணுவப் படைகளைச் சேர்ந்த 23,200 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழக உள்ளூர் மற்றும் ஆயுதப்படை போலீஸார் 74,162 பேர், சிறப்பு காவல்படையை சேர்ந்த 8,010 பேர், ஊர்க்காவல் படை, தீய ணைப்பு படை, முன்னாள் படைவீரர் கள் உள்ளிட்ட 34,130 பேர், வெளி மாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் (Tamil Nadu Police) மற்றும் ஊர்க்காவல் படைகளைச் சேர்ந்த 18,761 பேர் என மொத்தம் பாதுகாப்பு பணியில் 1 லட்சத்து 58,263 வீரர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
ALSO READ: TN Assembly polls: தமிழக சட்டசபை தேர்தலில் NOTA இன் பங்கு!
அனைத்து வாக்குச் சாவடி களுக்கும் தேவையான 1 லட்சத்து 55,102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,1 லட்சத்து 14,205 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1 லட் சத்து 20,807 விவிபாட் இயந்திரங் கள் ஆகியவை, வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத் தப்பட்டு இன்று வாக்குச் சாவடி களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த தேர்தலில் மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69,955 பேர் வாக்களிக்க உள்ளனர்.
6,938 வாக்குச்சாவடிகளில் - கடலூரில் (Cuddalore) 3,001, விழுப்புரம் மாவட்டத்தில் 2,368, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,569 வாக்குச்சாவடிகள் செயல்படும். இதில் 211 சாவடிகள் கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்படக்கூடியவை மற்றும் முக்கியமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில், 33 முக்கியமான வாக்குச் சாவடிகள் மற்றும் 53 பாதிக்கப்படக்கூடிய சாவடிகள் உள்ளன.
ஒரு அதிகாரி கூறுகையில், பாதிக்கப்படக்கூடிய நிலையங்களில் வெப்காஸ்டிங் மற்றும் சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கவும் தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்குப்பதிவு நியாயமாக இருப்பதை உறுதி செய்வதற்காக வாக்குச் சாவடிகளில் மைக்ரோ பார்வையாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR