ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக விருப்பம்; புது டிவிஸ்ட்

ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்புவதாக அக்கட்சியின் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 31, 2023, 10:13 PM IST
 ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக விருப்பம்; புது டிவிஸ்ட்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான உடனே திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்காக திமுக மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஈரோடு கிழக்கு தொகுதியில் வார்டு வாரியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சியான அதிமுக இதுவரை அந்த தொகுதியில் போட்டியிடுவது குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

மேலும் படிக்க | Budget 2023: ’நல்ல முன்னேற்றம்’ பட்ஜெட் தாக்கல் குறித்து பிடிஆர் சொன்ன முக்கிய தகவல்

ஓபிஎஸ் - இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்திருக்கும் அவர்களில், எடப்பாடி பழனிசாமி அணி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்கான அனைத்து வேலைகளையும் தீவிரமாக செய்து வருகிறது. முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைத்து, இடைத்தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். ஆனால், அவர்கள் இதுவரை வேட்பாளர் பெயரை அறிவிக்கவில்லை. இரட்டை இலை கேட்டு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருப்பதால், அந்த வழக்கின் தீர்ப்புக்காக எடப்பாடி பழனிசாமி அணி காத்திருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வமும் அந்த தீர்ப்பின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ள இருக்கிறார். தனது அணி போட்டியிடவில்லை என்றாலும் பாஜகவுக்கு முழு ஆதரவையும் கொடுக்க தயாராக இருப்பதாக அவர் வெளிப்படையாக அறிவித்துவிட்டார். அதேபோல் அந்த கூட்டணியில் இருக்கும் பாஜக, இதுவரை தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. 

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்றார். கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் அந்த தொகுதியில் பாஜக போட்டியிட வேண்டும் என விரும்புவதாக தெரிவித்த அவர், இது குறித்து மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பார் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க | ஈரோடு இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டேனா? எல்.கே.சுதீஷ் மறுப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News