சென்னை: தமிழ்நாட்டில் வரவிருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக அதிமுக கூட்டணி தொடரும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர். இந்த கூட்டணி மீண்டும் வெற்றி பெரும் எனவும் கூறியுள்ளனர். 2019 லோக் சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனயாக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்தது.
தமிழகம் வந்துள்ள அமித் ஷா (Amit Shah) தமிழகத்தில் 67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் மற்றும் சென்னை மெட்ரோ (Chennai Metro) ரயில் திட்ட கட்டம் -3 போன்ற பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் அமித் ஷா. அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi palaniswami) , துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் (O Panneerselvam) ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
மேலும் வரவிருக்கும் தேர்தலில் அதிமுக கூட்டணி (ADIDMK + BJP Alliance) தமிழக சட்டசபையில் பெரும்பான்மை இடங்களை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் அதிமுக தலைவர்கள் கூறினார்கள்.
ALSO READ | தமிழகத்தில் "இந்து தேசியவாதம்" எடுபடுமா? தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா
வேல் யாத்திரை (Vel Yatra) போன்ற பிரச்சினைகள் தொடர்பாக அதிமுக-பாஜக கூட்டணியில் சிறிய விரிசல் காணப்பட்டாலும், சென்னையில் சனிக்கிழமை நடந்த சம்பவங்களும், உள்துறை அமைச்சருக்கு அதிமுக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பெரும் வரவேற்பு போன்றவற்றை பார்க்கும் போது கூட்டணி தொடரும் என்ற அறிகுறியை காட்தியது.
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (நவம்பர் 21) மதியம் சென்னை விமான நிலையத்தை அடைந்தார். தனிவிமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவருக்கு தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
ALSO READ | இந்திய அளவில் டிரெண்டாகும் #GoBackAmitShah vs #TNWelcomesAmithShah
விமான நிலையத்திலிருந்து அமித் ஷா தங்கும் ஹோட்டலுக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் வரிசையாக நின்று, கட்சி கொடிகள் மற்றும் பலகைகளை அசைத்து வரவேற்றனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR