சென்னை: இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக இன்று (நவம்பர் 21) வந்தடைந்தார். அவரின் வருகை அனைவராலும் கூர்ந்து நோக்கப்படுகிறது. தனிவிமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவருக்கு தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah), திருவள்ளூர் மாவட்டத்தில் 400 கோடி ரூபாய் மதிப்பில் கட்டபப்ட்ட நீர்த்தேக்கத்தை பொதுபயன்பாட்டிற்கு அர்பணிப்பார். அதுமட்டுமல்ல, தமிழகத்தில் 67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
It is always great to be in Tamil Nadu. Thank you Chennai for this love and support. https://t.co/pxl5EaZ6on
— Amit Shah (@AmitShah) November 21, 2020
தமிழகம் வந்துள்ள அமித் ஷா , முதலில் மறைந்த மூத்த அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ராமச்சந்திரன் (MGR) மற்றும் செல்லி. ஜெயலலிதா (J Jayalalithaa) ஆகியோருக்கு மாலை 4.30 மணிக்கு கலைவனார் அரங்கத்தில் மலர் அஞ்சலி செலுத்தி பிறகு, உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பயணத்தைத் தொடங்குவார். தமிழக அரசின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ALSO READ | அமித்ஷாவின் தமிழக வருகையும் பல அரசியல் கணக்குகளும் -ஒரு அலசல்
பின்னர் அமித் ஷா தமிழக பாஜக பிரிவின் அலுவலக பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடன் ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்குவார். கட்சியின் பிரதிநிதிகளை சந்திப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2021 தேர்தல்கள் (குறித்த முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ள நிலையில், இந்த பயணம் முக்கியமானது.
பாரதத்தின் நிகழ்காலமே !
தமிழகத்தின் எதிர்காலமே !
தமிழகம் வரும் தலைமகன் அவர்களே வருக வருக #TNWelcomesAmitShah pic.twitter.com/9H1Ls3dHCg— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 21, 2020
நாட்டில் பெரும்பான்மையை பலப்படுத்துவதில் பாஜக (BJP) வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அவர்கள் ஒரு எம்.எல்.ஏ-வை கூட பெறமுடியவில்லை. எனவே வரவிருக்கும் தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு "இந்து தேசியவாத" உத்திகளை வகுக்க கட்சி முடிவு செய்துள்ளது. ஆனால் திராவிடக் கட்சிகளால் (Dravidian Parties) ஆளப்படும் மாநிலத்தில் இது செயல்படாது என்று அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR