பள்ளிக்கல்வி, உயர்கல்வி (ம) மின்சாரத் துறைகளில் TN அரசு சாதனை: EPS

காவிரி கோதாவரி இணைப்புத் திட்டத்தின் மூலம், கரூர் தொடங்கி மேட்டூர் வரை 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆற்றங்கரைகளில் நீரேற்று பாசன வசதி!!

Last Updated : Sep 29, 2019, 02:01 PM IST
பள்ளிக்கல்வி, உயர்கல்வி (ம) மின்சாரத் துறைகளில் TN அரசு சாதனை: EPS title=

காவிரி கோதாவரி இணைப்புத் திட்டத்தின் மூலம், கரூர் தொடங்கி மேட்டூர் வரை 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆற்றங்கரைகளில் நீரேற்று பாசன வசதி!!

முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு திட்ட முகாம், சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சின்னபார்க் என்ற பூங்காவை திறந்து வைத்தார். அப்போது தமிழகத்தில் இருந்த முதலமைச்சர்களில் ஒருவராவது தொகுதி வாரியாக மக்களை சந்தித்து மனு வாங்கினார்களா? என்று கேள்வி எழுப்பிய முதலமைச்சர் பழனிசாமி, நாங்கள், எதிர்க்கட்சிகளைபோல் வாய்ச்சொல் வீரர்கள் அல்ல என்று கூறியுள்ளார்.

இதையடுத்து போது மக்களிடம் பேசிய அவர்; ‘தமிழகத்தில் இருந்த முதலமைச்சர்களில் ஒருவராவது தொகுதி வாரியாக மக்களை சந்தித்து மனு வாங்கினார்களா?. பொதுமக்களின் ஒரு மனுவைக் கூட விட்டு விடாமல் படித்து பார்த்து தகுதி உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முதியோர் உதவித்தொகைக்காக அதிக மனு வருகிறது; தமிழகம் முழுவதும் 5 லட்சம் தகுதியுள்ள மனுவுக்கு உதவித்தொகை வழங்கப்படும். முதலமைச்சர் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டத்தின் நோக்கம் மக்களை தேடி அதிகாரிகளை வரவைப்பது தான். மக்களின் பிரச்னைக்கு தீர்வுகாண்பதில் ஏற்படும் சிரமத்தை குறைக்கவே சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது’ என்றார்.

காவிரி கோதாவரி இணைப்புத் திட்டத்தின் மூலம், கரூர் தொடங்கி மேட்டூர் வரை 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆற்றங்கரைகளில் நீரேற்று பாசன வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் மின்சாரத் துறைகளில் தமிழகம் பல்வேறு சாதனைகள் புரிந்து வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். 100க்கு 49 பேர் தமிழகத்தில் உயர்கல்வி படிப்பதாக முதலமைச்சர் கூறினார். அதிகம் பேர் உயர்கல்வி படிக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், தமிழகம் முழுவதும் 40,000 ஏரி, குளங்கள் படிப்படியாக தூர்வாரப்படும். கரூரில் காவிரியின் குறுக்கே விரைவில் தடுப்பணை கட்டப்படும்.எதிர்க்கட்சிகளைபோல் வாய்ச்சொல் வீரர்கள் அல்ல; நாங்கள் எதை சொல்கிறோமோ அதை செய்து முடிப்போம்’ என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

Trending News