Tomato Price Hike Update: சென்னை தலைமை செயலகத்தில், 'Coop Bazaar' கூட்டுறவு சந்தை செயலியை இயக்கி வைத்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று (ஜூலை 6) செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் வங்கி சேவை மற்றும் விவசாயத்துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கூட்டுறவு மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மலிவான விலையில் நுகர்வோருக்கு கிடைக்கும் வகையில் எளிதாக இல்லங்களில் இருந்தவாரே செயலி மூலம் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். எளிய முறையில் குறைவான சேவைக் கட்டணத்துடன் செயலி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
முதற்கட்டமாக 8 கூட்டுறவுச் சங்கங்கள் உற்பத்தி செய்யும் 64 வகையிலான பொருட்கள் இந்த செயலி மூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சட்டமன்றத்தில் நடப்பு கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஒப்புதலோடு அறிவித்தோம், அதை இன்று செயல்படுத்தி உள்ளோம்.
நியாய விலைக்கடைகளில் தேவையான அளவிற்கு தக்காளி அனுப்பபட்டு வருகிறது. 111 மையங்களில் விற்கப்படுகிறது. சென்னை தாம்பரம் ஆவடி மாநகராட்சிகளில் முதற்கட்டமாக விற்பனை அனைத்து நியாய விலைக்கடைகளிலும் விநியோகிக்கப்படுகிறது.
பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. அகில இந்திய அளவில் விலையேற்றம் இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த அரசு எடுத்த நடவடிக்கையில் இந்தியாவில் மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருப்பவர்கள் பாராட்டுகிறார்கள். பிற மாநில நகரங்களில் தட்டுபாடுகளுக்கு மாநில அரசுகள் நடவடிக்கைக்கள எடுக்கவில்லை.
மேலும் படிக்க | Tomato price: தக்காளி விலை எப்போது குறையும்? வெளியான அதிர்ச்சி தகவல்!
மயிலாப்பூர் உள்ளிட்ட கடைகளில் பட்டியலில் உள்ள கடைகளுக்கு தக்காளி அனுப்பப்பட்டு வருகிறது. 82 நியாய விலைக்கடைகளில் சப்ளை செய்யப்படுகிறது. தற்போது தக்காளி விலை குறைந்திருக்கிறது. நியாய விலைக்கடைகளில் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. zeenews.india.com/tamil/videos/82-ration-shops-in-chennai-are-selling-tomatoes-from-today-452311
பரப்பரப்புக்காக விலை அதிகமாக கூறக்கூடாது. ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை பிற மாவட்டங்களில் விற்பனை செய்ய படிப்படையாக விரிவுபடுத்தப்பட உள்ளது. மளிகைப்பொருட்கள் தேசிய அளவில் விலை உயர்ந்திருக்கிறது. விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தலையிட வேண்டும். தக்காளியை வியாபாரிகள் யாரும் பதுக்கவில்லை. வியாபாரிகள் ஒத்துழைப்பதால் நடவடிக்கை இல்லை" எனத் தெரிவித்தார்.
கடந்த சில நாள்களாக, தக்காளியின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. பருவமழை காலம் மற்றும் வரத்து குறைவால் இந்த திடீர் விலையேற்றம் என கூறப்படுகிறது. சென்னை மட்டுமின்றி மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி என நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இந்த விலையேற்றம் எதிரொலிக்கிறது. இதனால், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும், விரைவில் இதன் விலை குறையும் என கூறப்படுகிறது.
முன்னதாக, கர்நாடகாவில் இருந்து தக்காளியின் வரத்து அதிகம் வர தொடங்கினால் அதன் விலை வீழ்ச்சியடையும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் தெரிவித்திருந்தார். தற்போது தமிழ்நாட்டில் தக்காளியின் விலை ஒரு கிலோ 100- 140 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ