ஏன்? தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நிரந்தர தலைவர் கோருகிறது

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்க வேண்டும் எனக்கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Dec 8, 2018, 05:50 PM IST
ஏன்? தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நிரந்தர தலைவர் கோருகிறது

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்க வேண்டும் எனக்கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு ஆணையின் படி, காவிரி நதிநீர் குறித்து புதிய வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு தயார் செய்தது. அந்த செயல் திட்டத்தை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக் கொண்டன. பின்னர் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் இடைக்கால தலைவராக மத்திய நீர்வளத்துறை ஆணையத் தலைவர் மசூத் ஹூசைன் நியமிக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட 9 மாதங்கள் கழித்து தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் தலைவர் நியமனம் பிரச்சினை ஏற்ப்படுத்தி உள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமலேயே மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சட்ட விரோதமா மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி தந்துள்ளது.

இந்த சம்பவம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்திற்கு அனுமதி அளித்ததற்கு கண்டனம் தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

இந்நிலையில், தற்போது இருக்கும் இடைக்கால தலைவருக்கு பதிலாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தரத் தலைவர் மற்றும் முழு நேர உறுப்பினர்களை நியமிக்குமாறு நீர்வள ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்து மனு தாக்கல் செய்துள்ளது.