திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த தமிழக அரசு

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது சேலம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தது தமிழக அரசு.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Nov 3, 2018, 02:25 PM IST
திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த தமிழக அரசு
File photo

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது சேலம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தது தமிழக அரசு.

கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் நாள் திமுக சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துக்கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். அப்பொழுது தமிழக அரசு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசினார்.

இதனையடுத்து எந்த ஆதாரம் இல்லாமல் தமிழக அரசு மற்றும் தமிழக முதல்வருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி உள்ளார். இதனால் அவர் மீது 499, 500 கிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்து உள்ளேன் என அரசு வழக்கறிஞர் தனசேகரன் கூறியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.