தமிழகத்தில் இன்று வெளியான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் ரேங்க் முறை மாற்றப்பட்டு ஏபிசி கிரேடு முறை பின்பற்றப்படுகிறது.
இந்த வகையில்,
481 மதிப்பெண்களுக்கு அதிகமாக எடுத்த மாணவர்கள் 38,613 பேராகவும்
450 முதல் 480 வரை எடுத்த மாணவர்கள் 1,22,757 பேராகவும்
426 முதல் 450 வரை எடுத்த மாணவர்கள் 1,13,831 பேராகவும்
401 முதல் 425 வரை எடுத்த மாணவர்கள் 1,11,266 பேராகவும்
301 முதல் 400 வரை எடுத்த மாணவர்கள் 3,66948 பேராகவும் உள்ளனர்.
கடந்த முறை மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு ரேங்க் முறை இருந்தது. இந்த ஆண்டு முதல் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதாவது, ஏ, பி, சி என்று மதிப்பெண்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.