இன்றைய COVID-19 நிலவரம்: தமிழகத்தில் 5,488 பேருக்கு தொற்று; 67 பேர் மரணம் -முழு பட்டியல்

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 5,30,908 ஆக அதிகரித்துள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 18, 2020, 07:01 PM IST
  • இன்றைய கொரோனா பாதிப்பு - 5,488
  • சிகிச்சை பெற்று வருபவர்கள் - 46,610.
  • குணமடைந்து வெளியேறியவர்கள் - 5,525.
  • இன்று இறப்பு - 67
இன்றைய COVID-19 நிலவரம்: தமிழகத்தில் 5,488 பேருக்கு தொற்று; 67 பேர் மரணம் -முழு பட்டியல் title=

சென்னை: தமிழகத்தில் இன்று 5,488 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 989 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 5,30,908 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 8,685 ஆக உயர்ந்தது.

அதேநேரத்தில் இன்று 5,525 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 4,75,717 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 46,610 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இன்று 85,543 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 63,03,466 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரம்: 18-09-2020
கொரோனா பாதிப்பு - 5,488
சிகிச்சை பெற்று வருபவர்கள் - 46,610
பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் - 85,543
குணமடைந்து வெளியேறியவர்கள் - 5,525
இறப்பு - 67

ALSO READ | 

Corona Virus: வதந்திகளும் கட்டுக்கதைகளும்... உண்மை என்ன?

கொரோனாவுக்கு பயந்து கமல்ஹாசன் 100 நாட்கள் உள்ளேயே இருந்தார்: ஜெயக்குமார்

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி சாதனை படைத்த இந்தியா!!!

"Namma Chennai" செயலி மூலம் மக்கள் தங்கள் குறைகளையும் புகார்களையும் தெரியப்படுத்தலாம். அதாவது கொரோனா வைரஸ் பாதிப்பு, மழைநீர் தேக்கம், குப்பை தேக்கம், சேதமடைந்த சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது சுகாதாரம் போன்றவை சார்ந்த குறைகையும், புகார்களையும் சென்னை மக்கள் தெரியப்படுத்தலாம். புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது. இனி மக்கள் அங்கும், இங்கும் அலைய வேண்டிய நிலை ஏற்படாது. வீட்டிலிருந்தே "நம்ம சென்னை" செயலி மூலம் சென்னை மாநகராட்சியை தொடரப்பு கொள்ளலாம். 

No description available.

Trending News