Donald Trump, EPS…. கட்சி, நாடு, கண்டம் என்ற பாகுபாடின்றி விரிந்து பரந்திருக்கும் திமுக-வின் உறுப்பினர் பட்டியல்!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் திமுகவின் ‘உறுப்பினர்களாக’ மாறிவிட்டனர். இதை நிரூபிக்க அவர்களிடம் உறுப்பினர் அட்டைகளும் உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 24, 2020, 05:46 PM IST
  • இந்திய குடிமகனாகக் கூட இல்லாத அமெரிக்க அதிபர் திமுக உறுப்பினராகி விட்டார்.
  • இளம் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக திமுக தனது “எல்லோரும் நம்முடம்” பிரச்சாரத்தை சமீபத்தில் மேற்கொண்டது.
  • போலி உறுப்பினர் அட்டைகள் குறித்த இந்த சிக்கலை பல செயல்பாட்டாளர்கள் எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தனர்-டி.கே.எஸ். இளங்கோவன்.
Donald Trump, EPS…. கட்சி, நாடு, கண்டம் என்ற பாகுபாடின்றி விரிந்து பரந்திருக்கும் திமுக-வின் உறுப்பினர் பட்டியல்!! title=

‘அட, டொனால்ட் டிரம்பே எங்க பக்கம்….Card இருக்கு’ என திமுக தற்போது மார் தட்டிக்கொள்ளலாம். தேர்தல் நேரம் வந்தால், நாம் பல வினோத காட்சிகளைப் பார்ப்பது வழக்கம்தான். ஆனால், இப்போது நாம் காணும் காட்சி ஒரு படி மேலே உள்ளது. இந்திய குடிமகனாகக் கூட இல்லாத அமெரிக்க அதிபர் திமுக உறுப்பினராகி விட்டார். அட, முதல்வர் எடப்பாடி பழசிசாமி கூட திமுக உறுப்பினர்தானாம்!!

ஆம்!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி (K Palanisamy) ஆகியோர் திமுகவின் ‘உறுப்பினர்களாக’ மாறிவிட்டனர். இதை நிரூபிக்க அவர்களிடம் உறுப்பினர் அட்டைகளும் உள்ளன.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மூத்த சகோதரர் மு.க. அழகிரி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை கருணாநிதி கட்சித் தலைவராக இருந்தபோது கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரும் தற்போது திமுக உறுப்பினராகிவிட்டார்.

திமுக-வின் சமீபத்திய ஆன்லைன் சேர்க்கை காரணமாக இந்த வி.ஐ.பி.க்கள் திமுக-வின் (DMK) ‘உறுப்பினர்களாக’ மாறிவிட்டார்கள். இந்த ஆன்லைன் சேர்க்கையின் நிபந்தனைகளின் படி, 18 வயதை நிறைவு செய்திருக்கும் எவரும் கட்சியின் உறுப்பினர்களாகலாம். ஆன்லைன் உறுப்பினர் படிவம் அடிப்படை விவரங்களை மட்டுமே கேட்கிறது. சரிபார்ப்பு OTP மூலமாக மட்டுமே நடக்கிறது. ஒரு மொபைல் எண்ணை வழங்கி சுலபமாக யாருக்கு வேண்டுமானாலும் உறுப்பினர் பதவியைப் பெற்று விடலாம்.

இளம் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக திமுக தனது “எல்லோரும் நம்முடம்” பிரச்சாரத்தை சமீபத்தில் மேற்கொண்டது. மேலும் பல்வேறு வலைத்தளங்கள் மற்றும் ஆன்லைன் வெளியீடுகளில் தீவிர டிஜிட்டல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திமுகவின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் (Prashant Kishore) மற்றும் அவரது I-PAC குழுவினர் கட்சியில் 30 வயதுக்கு குறைவான உறுப்பினர்கள் மிகக் குறைவாக இருப்பதைக் கண்டனர். இதையடுத்து இளம் வாக்காளர்களை கட்சியில் சேர்ப்பதே இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. கட்சியின் இளைஞர் பிரிவுக்கு தலைமை தாங்கும் ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு கூட 42 வயது ஆகிறது. எனவே 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இளம் வாக்காளர்களை ஈர்க்க ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை I-PAC குழு வகுத்துள்ளது.

முதல் மூன்று நாட்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் இணைந்ததால் இந்த உறுப்பினர் பிரச்சாரம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாக கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறினார். திமுகவின் வலைத்தளத்தில் வெறும் பத்து நாட்களில் கிட்டத்தட்ட நான்கு லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உறுப்பினராவதற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்க முடியும் என்பதால், ஒரு சிலர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் EPS ஆகியோருக்கு அவர்களது புகைப்படங்களுடம் விண்ணப்பித்து, அவர்களின் உறுப்பினர் அட்டைகளை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதனால் புதிதாக சேருபவர்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

Donald Trump மற்றும் EPS-ஐ திமுகவின் உறுப்பினர்களாக ஆக்கியது யார் என்று தெரியவில்லை என்றாலும், மு,க. அழகிரியை உறுப்பினராக்கியவர் இதனை ஒப்புக்கொண்டுள்ளார்.

ALSO READ: இந்திய கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழக நிபுணர்கள் அவசியம்: Modi-க்கு EPS கடிதம்!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக உறுப்பினரும், அழகிரியின் தீவிர ஆதரவாளருமான கபிலன், தனது தலைவர் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்ற உண்மையை ஜீரணிக்க முடியாததால், அவர் அழகிரியின் பெயரில் உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பித்ததாகக் கூறியுள்ளார்.

திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனை தொடர்பு கொண்டபோது போலி உறுப்பினர் அட்டைகள் குறித்த இந்த சிக்கலை பல செயல்பாட்டாளர்கள் தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தனர் என்றார். “நாங்கள் இதை சரிசெய்ய முயற்சிக்கிறோம். புதிய விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆன்லைன் உறுப்பினர் அட்டையை உண்மையான உறுப்பினர் அட்டையுடன் பரிமாறிக்கொள்ள வரும்போது கூடுதல் அடையாளச் சான்றைக் கேட்கவுள்ளோம். உள்ளூர் திமுக செயல்பாட்டாளர்கள் பூத் மட்டத்தில் விண்ணப்பதாரர்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்குமாறு கேட்கப்படுவார்கள்,” என்று அவர் கூறினார். இந்த ஆன்லைன் பிரச்சாரம் கட்சியின் உறுப்பினர் தளத்தை விரிவாக்க மட்டுமே என்று அவர் தெளிவுபடுத்தினார்.

ALSO READ: இந்தி மொழி வெறி, எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது: MKS

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News