மதுரை: தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்கநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை தாக்கியதில் காளை உரிமையாளர் உயிர் இழந்தார். அதேபோல மாடுபிடி வீரர் ஒருவர் இறந்தார்.
ஸ்ரீதர் என்பவர் தனது காளையை ஜல்லிக்கட்டில் களமிறக்க ஆலங்கநல்லூருக்கு அழைத்து வந்திருந்தார். அவர் தனது காளைக்காக வெளியில் காத்திருந்தபோது, அப்பொழுது மற்றொரு காளையால் தாக்கப்பட்டு காயமடைந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல காளைகளை அடக்க முயன்றபோது சுமார் 30 பேர் காயமடைந்தனர். அதில் பலர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி என்பது பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும். தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றாலும் ஆலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலமானது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டி காலையில் தொடங்கியது. 700 க்கும் மேற்பட்ட காளைகளும், 600 க்கு மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துக்கொண்டனர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.