பேரிடரே இல்லை என்றவர் அதை ஆய்வு செய்ய வருகிறார்... உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!

Latest News In Tamil: பேரிடர் இல்லை என தெரிவித்த நிதி அமைச்சர் நாளை தூத்துக்குடியில் பேரிடர் பாதிப்புகளை பார்க்க வருகிறார் என்றும் ஆய்வு செய்து உரிய நிதியை தருவார் என நம்புகிறோம் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 25, 2023, 01:13 PM IST
  • உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
  • தற்போது இதில் அரசியல் வேண்டாம் - உதயநிதி ஸ்டாலின்
  • என்ன பணிகள் நடக்கிறது என்பது மக்களுக்கு தெரியும் - உதயநிதி ஸ்டாலின்
பேரிடரே இல்லை என்றவர் அதை ஆய்வு செய்ய வருகிறார்... உதயநிதி ஸ்டாலின் அட்டாக்! title=

Latest News In Tamil: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 16 பேரில் 11 நபர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளை தமிழக இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) இன்று (டிச. 25) வழங்கினார். தொடர்ந்தவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

'அரசியல் வேண்டாம்'

அப்போது அவர் கூறியதாவது,"முதற்கட்டமாக 11 உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கியுள்ளோம். கால்நடைகள், விளைநிலங்கள் ஆகியவற்றை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் முதற்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்படும். பத்து நாட்களாக அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் களத்தில் பணி செய்கிறார்கள், தற்போது இதில் அரசியல் வேண்டாம்.

குளங்களை தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழிசை சௌந்தர்ராஜன் அரசியல் காரணமாக பேசுகிறார். வரலாறு காணாத நூறு ஆண்டுகளில் இல்லாத அளவு கன மழை பெய்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என்ன பணிகள் நடக்கிறது என்பது மக்களுக்கு தெரியும். மக்கள் இந்த பிரச்சனையை புரிந்து கொள்வார்கள்.

மேலும் படிக்க | மக்களுக்கு பொங்கல் திருநாளில் நல்ல செய்தி... அதுவும் முதலமைச்சர் கைகளால்!

தகுந்த நிதி வழங்குவார் என நம்புகிறோம்

மலை கிராமமான மாஞ்சோலைக்கு (Manjolai) பேருந்து போக்குவரத்து துவங்காத நிலையில், மக்கள் இலவசமாக வேன் உள்ளிட்ட வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள. பேரிடர் இல்லை என கூறிய நிதி அமைச்சர் பேரிடர் பாதிப்புகளை பார்வையிட நாளை (டிச. 26) தூத்துக்குடி வருகிறார். முறையாக பார்வையிட்டு தகுந்த ஆய்வு செய்து நிதி வழங்குவார் என நம்புகிறோம். 

பிரதமர் மோடி (PM Modi) தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை (MK Stalin) தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போதைய நிலைமை குறித்து பேசி உள்ளார். முதலமைச்சரும் நிலைமையை எடுத்துக்கூறி கூடுதல் நிதி கோரி உள்ளார். பிரதமரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து நாளை தூத்துக்குடி வரக்கூடிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தகுந்த நிதி தருவார் என நினைக்கிறோம்" என்றார். 

அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வா. வேலு,ஸ மூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உடன் இருந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் வல்லநாடு அருகே உள்ள பக்கப்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு வழங்கினர்.

மேலும் படிக்க | முதல்வர் ஸ்டாலினை அழைத்து பேசிய பிரதமர் மோடி... முழு பின்னணி இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News