வண்டலூர் அவுட்டர் ரிங் ரோட்டில் டீசல் திருடும் கும்பல் - அங்கேயே மற்ற வாகனங்களுக்கு விற்பனை - களைகட்டும் பிசினஸ்!

Vandalur Outer Ring Road : வண்டலூர் அவுட்டர் ரிங் சாலையில் நிறுத்திவைக்கப்படும் லாரிகளில் டீசல் திருட்டு ? எப்படியெல்லாம் திருடுகிறார்கள் ? ஒரு நேரடி லைவ் ரிப்போர்ட்   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jul 5, 2022, 12:47 PM IST
  • வண்டலூர் அவுட்டர் ரிங் சாலையில் என்ன நடக்கிறது ?
  • ஒரு நாளைக்கு ஆயிரம் லிட்டர் டீசலைத் திருடும் கும்பல்
  • நடவடிக்கை எடுக்குமா மணிமங்கலம் போலீஸ் ?
வண்டலூர் அவுட்டர் ரிங் ரோட்டில் டீசல் திருடும் கும்பல் - அங்கேயே மற்ற வாகனங்களுக்கு விற்பனை - களைகட்டும் பிசினஸ்! title=

பகல் நேரங்களில் நகரத்துக்குள் சிக்கிக் கொள்ளும் லாரிகள், நெடுஞ்சாலையின் ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டு இரவு நேரங்களில் புறப்படுவது வழக்கம். அந்த வகையில், தாம்பரம், வண்டலூர், மதுரவாயல் - வானகரம் பைபாஸ் சாலை, வண்டலூர் அவுட்டர் ரிங் சாலை என பல்வேறு இடங்களில் லாரிகள் வரிசையாக சாலையோரம் நிறுத்திவைக்கப்படுகின்றன. இந்த லாரிகள் பகல் நேரங்களில் இந்த இடங்களில் நின்றுவிட்டு இரவு நேரங்களில் புறப்படுகின்றன.

மேலும் படிக்க | சென்னை புறநகரில் ரேஸில் ஈடுபட்ட லாரிகள் - நடந்தது என்ன ?

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த வண்டலூர் அவுட்டர் ரிங் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடி அருகே பழைய பொருட்களை வாங்கும் கடைகள் அமைந்துள்ளன. அதாவது கைலாங் கடைகள். இந்தக் கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இது வெறும் ‘சைட்’ பிசினஸ்தான். மெயின் பிசினஸ் என்ன தெரியுமா ?

வண்டலூர் அவுட்டர் ரிங் சாலையில் நிறுத்திவைக்கப்படும் லாரிகளில் இருந்து பட்டப்பகலில் வெகு இயல்பாக டீசலைத் திருடுவது. வாட்டர் கேன் லெவலில் திருடும் கும்பலைப் பார்த்திருப்போம். இந்த கைலாங் கடை ஊழியர்கள் 25 லிட்டர் தண்ணீர் கேன்களைக் கொண்டு திருடுகிறார்கள். அதுவும், எப்படியென்றால் சுற்றியிருக்கும் பொதுமக்களுக்கு தாங்கள் திருடுகிறோம் என்ற உணர்வே இல்லாத வகையில் உள்ளது.

diesel theft

பொதுமக்களும் ஏதோ லாரிக்கு தொடர்பானவர்கள் போல என்று நினைத்துக் கொண்டுச் செல்கின்றனர். அந்த நினைப்பை மூலதனமாகக் கொண்டு, வரிசையாக டீசல்களைத் திருடும் இந்தக் கும்பல் அடுத்து என்ன செய்கிறது தெரியுமா ?

கைலாங்கடை வாசலிலேயே திருடிய டீசலை அந்த வழியாக வரும் வேறொரு வாகனங்களுக்கு விற்பனை செய்கிறது அந்த திருட்டுக் கும்பல். வாடிக்கையாளர்களும் கைலாங் கடை ஊழியர்கள் பைபாஸில் ஆபத்துக்கு உதவும் என்று வாங்கி வைத்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டு டீசலை வாங்கிச்செல்கின்றனர். ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில், இந்த கைலாங் கடை ஊழியர்கள் 90 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்கின்றனர். வண்டலூர் அவுட்டர் ரிங் சாலையில் இந்த பிசினஸ் களைகட்டுகிறது இவர்களுக்கு.!

diesel theft

இந்த அட்டூழியங்கள் எல்லாம் புகார்களாகவும், வாய்மொழி குற்றச்சாட்டுகளாகவும் இருந்து வந்த நிலையில், தற்போது வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளன. இதுதொடர்பாக மணிமங்கலம் காவல்நிலையத்தில் வாகன ஓட்டிகள் புகார் அளித்துள்ளனர். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வாகன ஓட்டிகள் புலம்பித் தள்ளுகின்றனர்.

diesel theft

ஒரு நாளைக்கு ஆயிரம் லிட்டர் வரை டீசல் திருட்டு நடைபெறுகிறதென்றால் கைலாங்கடை ஊழியர்களின் வளர்ச்சி எந்தளவுக்கு இருக்கும் என்று வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க | பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு ‘குட்-பை’ - வண்டலூர் பூங்கா அதிரடி நடவடிக்கை

உடனடியாக இதுபோன்ற திருட்டுக்கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மணிமங்கலம் காவல்நிலையத்துக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இனியாவது சமரசமில்லாமல் நடவடிக்கை எடுப்பார்களா மணிமங்கலம் போலீஸார் ?!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News