Jai Beam: நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படத்திற்கு விருதோ அங்கீகாரமோ கொடுக்கவேண்டாம் - வன்னியர் சங்கம்

சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் ஜெய் பீம் படத்திற்கு விருதோ அங்கீகாரமோ கொடுக்கவேண்டாம் என வன்னியர் சங்கம், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 18, 2021, 09:34 PM IST
  • ஜெய் பீம் படத்திற்கு விருது கொடுக்கக்கூடாது
  • ஜெய் பீம் திரைப்படத்திற்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டாம்
  • மத்திய, மாநில அரசுகளுக்கு வன்னியர் சங்கம் கோரிக்கை
Jai Beam: நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படத்திற்கு விருதோ அங்கீகாரமோ கொடுக்கவேண்டாம் - வன்னியர் சங்கம்   title=

சென்னை: நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படத்திற்கு விருதோ அங்கீகாரமோ கொடுக்கவேண்டாம்  என்று வன்னியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஜெய் பீம் படத்தின் மீது  பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

"ஜெய்பீம்" (Jai Bhim) படத்தின் சில காட்சிகள் சர்ச்சையை எழுப்பியது. படத்தில் வில்லனாக காட்டப்பட்டுள்ள போலீஸ் கதாப்பாத்திரத்தின் உண்மையான பெயர் அந்தோணி சாமி என்பதை மாற்றி, மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.

அதேபோல் குற்றவாளி கதாபாத்திரம் இருக்கும் இடத்தில் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தததை தொடர்ந்து, படத்தில் இருந்த அந்த "காலண்டர் காட்சி" திருத்தம் செய்யப்பட்டது.

ஆனால் இந்த விமர்சனங்களை அடுத்து, பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss), சூர்யாவை நோக்கி பல கேள்வி எழுப்பி கடிதம் ஒன்றை தனது அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட விவகாரம் சூடுப்பிடிக்கத் தொடங்கியது. அன்புமணியின் அறிக்கையைஅடுத்து நடிகர் சூர்யாவும் விரிவான பதில் அளித்திருந்தார். இந்த விவாகரத்துக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது என அனைவரும் நினைத்திருந்த நிலையில், வன்னியர் சங்கம் சார்பில் ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

Also Read | ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டிய கேரள முன்னாள் அமைச்சர்!

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னொரு சமுதாயத்தை, இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை. ஜெய் பீம் (Movie JaiBheem) திரைப்படத்தில் தேவையின்றியும், திட்டமிட்டும் வன்னியர் சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.

ஜெய் பீம் திரைப்படம், பொதுமக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக, பா.ம.கவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அன்புமணி ராமதாஸ் (PMK Anbumani Ramadoss) தெரிவித்திருந்தார். நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளிவந்துள்ள ‘ஜெய்பீம்’  திரைப்படம் தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்கள் மத்தியில் வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

surya

தற்போது வன்னியர் சங்கங்களின் சார்பில் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | ஜெய்பீம் விவகாரம் விலை பேச முற்படுவது வேதனை - நாசர் கவலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News