வேலூர் மக்களவைத் தேர்தல்: திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டி

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டி என அறிவிப்பு.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 6, 2019, 12:55 PM IST
வேலூர் மக்களவைத் தேர்தல்: திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டி title=

சென்னை: வேலூர் மக்களவை தேர்தலில் திமுகவின் சார்பில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவார் என அறிவிப்பு. 

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற இருந்தது. அந்த தொகுதியில் திமுக சார்பில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அதேபோல அதிமுக சார்பில் புதிய நிதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரமும் நடைபெற்றது.

ஆனால் வேலூர் தொகுதியில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து தமிழகத்தில் இருந்த மற்ற 38 தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்று முடிவும் அறிவிக்கப்பட்டது.

வேலூர் தொகுதியில் தேர்தல் எப்பொழுது நடைபெறும் என அனைத்து கட்சிகளும் கேள்வி எழுப்பி வந்தனர். இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டி.எம். கதிர் ஆனந்த் அவர்கள் போட்டியிடுவார் என கழகத்தின் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News