சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 2022 ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், இந்த விழாவுக்கு தலைமை தாங்கினார். விருது பெற்றவர்களுக்கு தலா 50 ஆயிரத்திற்கான பொற்க்கிழியும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் டெல்லி மாநில சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருத்தாளர்களை வாழ்த்தினார். இந்த விழாவில், அம்பேத்கர் சுடர் விருது கர்நாடக முன்னாள் முதலமைச்சர் திரு.சித்தராமையாவுக்கு வழங்கப்பட்டது. அதையடுத்து, பெரியார் ஒளி விருது, எழுத்தாளர் திரு.ராஜதுரை அவர்களுக்கு வழங்கப்பட்டது.
காமராசர் கதிர் விருது, தொழிலதிபர் முனைவர் திரு.விஜி சந்தோஷம் அவர்களுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திரு.செல்லப்பன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
அதையடுத்து, காயிதே மில்லத் பிறை விருது, SDPI கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு.தெகலான் பாகவி அவர்களுக்கும், செம்மொழி ஞாயிறு விருது, தொல்லியல் அறிஞர் திரு.க.ராஜன் அவர்களுக்கும், மார்க்ஸ் மாமணி விருது மறைந்த எழுத்தாளர் திரு.இரா.ஜவகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
மேலும் படிக்க | குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்த விழாவில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சித்தராமையா ஒரு கொள்கை சார்ந்த பார்வை கொண்டவர் என்றும், சித்தராமையா ஏன் இந்த தேசத்தின் பிரதமராக வரக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். அப்படி அவர் பிரதமராக வந்தால் இந்த நாட்டில் சனாதனவாதிகள் எந்த காலத்திலும் தலை தூக்க முடியாது என்றும், பாஜக இந்துக்களுக்கு எதிரி என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் உண்மையான எதிரி புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு சட்டம் என்றும், இரண்டு கருத்தியலுக்கு எதிரான யுத்தம் இந்த மண்ணில் நடைபெற்று கொண்டிருக்கிறது; சமூகநீதிக்காக தன்னை ஒப்படைத்து கொண்ட தலைவர் சித்தராமையா என்றும் பாராட்டினார்.
அரசு ஒப்பந்தத்தில் இட ஒதுக்கீடு, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது இந்தியாவிலேயே சித்தராமையா தான் என்று குறிப்பிட்ட தொல் திருமாவளவன், தான் காங்கிரஸ் உடன் ஒட்டிக் கொள்ள பார்க்கிறான் என்று பேசுவதை பற்றி கவலைப்படவில்லை என்றும், ஆனால் நமக்கு வேறு வழியில்லை என்று குறிப்பிட்டு, சனாதன சக்திகளை வீழ்த்த வேண்டுமென்றால் தேசிய அளவில் காங்கிரஸ் உடன் கை கோர்க்க வேண்டும் என்றார்.
மேலும் படிக்க | அகதிகளை பணத்தால் ஏழ்மையான நாடுகளுக்கு விரட்டும் மேற்குலக நாடுகள்
மோடியும் அமித் ஷா வும் பிரமணர்கள் இல்லை என்றாலும், அவர்கள் இருவருமே கார்ப்பரேட்களின் பணியாளர்க்ரள் என்றும், மோகன் பகவத் பார்வையில் மோடி அமித் ஷா ஆகியோர் சூத்திரர்கள் என்றும், அவர்களுக்கு மோடி அமித் ஷா முர்மு அனைவரும் ஒன்று தான் என்றும் தெரிவித்தார். சனதான சக்திகளை வீழ்த்த அகில இந்திய அளவில் நாம் ஒருங்கிணைய வேண்டிய தேவை இருக்கிறது என்று தொல் திருமாவளவன் தெரிவித்தார்.
அனைத்து அரசியல் கட்சிகளும், சனநாயக சக்திகளும் ஒன்று சேர்ந்து பாரதிய ஜனதா என்ற ஒற்றை கட்சியை வீழ்த்த நாம் உழைக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை நம்மால் ஓட ஓட விரட்ட முடியும். அதற்காக, தேசிய அளவில் ஒருங்கிணைய வேண்டும். அதிமுக முதுகில் சவாரி செய்து இங்கே காலூன்றி விடலாம் என்று சிலர் மனப்பால் குடிக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
காங்கிரசுடன் இணைந்து தான் பாஜக வை வீழ்த்த முடியும் இல்லை என்றால் தமிழகத்தில் மட்டும்தான் 40/40 வெற்றி பெற முடியும். தேசிய அளவில் நாம் வெற்றி பெற வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று தொல் திருமாவளவன் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க | அண்ணாமலைக்கு அம்பேத்கர் புத்தகத்தை வழங்கிய விசிக மாணவர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ