அண்ணாமலைக்கு அம்பேத்கர் புத்தகத்தை வழங்கிய விசிக மாணவர்!

மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விசிகவின் மாணவர் கழகத்தினர் அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை அஞ்சலில் அனுப்பி வைத்துள்ளனர். 

Written by - Dayana Rosilin | Last Updated : May 24, 2022, 03:23 PM IST
  • அம்பேத்கருக்கு இந்துத்துவ சாயம் புச நினைக்கிறார்கள்
  • அண்ணாமலைக்கு புத்தகம் அனுப்பிய மாணவர்கள்
  • எப்போது வேண்டுமானாலும் விவாதிக்க தயார்
அண்ணாமலைக்கு அம்பேத்கர் புத்தகத்தை வழங்கிய விசிக மாணவர்! title=

சட்டமேதை அம்பேத்கருக்கு பாஜகவினர் இந்துத்துவ சாயம் பூச முயற்சிப்பதாக விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகின்றனர். இதற்கு தகுந்தால்போல், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தான் 20 ஆயிரம் புத்தகங்கள் படித்திருப்பதாகவும், அம்பேத்கர் இந்து மதத்திற்கு ஆதரவானவர் எனவும் இது குறித்து யாரிடம் வேண்டுமானும் விவாதிக்க தயாராக உள்ளதாகவும் கூறியிருந்தார்.

மேலும் படிக்க | ஓபிஎஸ்ஸைப் பாராட்டிய முதல்வர்! இலங்கைக்கு உதவ ஒரு மாத சம்பளத்தை நிதியாக அளித்த கட்சிகள்!

பெரும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலையின் இந்த பேச்சிற்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள விசிகவின் முற்போக்கு மாணவர் கழகம், தன் வாழ்நாள் முழுவதும் மூர்க்கமாக இந்துத்துவத்தை எதிர்த்துப் போராடிய புரட்சியாளர் அம்பேத்கருக்கு, இந்துத்துவ சாயம் பூச நினைக்கும் செயல் மாபெரும் குற்றம் என அறிவுறுத்தியுள்ளனர்.

VCK

இதனால், அம்பேத்கர் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் "இந்து மதத்தின் புதிர்கள்" எனும் அம்பேத்கரே எழுதிய புத்தகத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அஞ்சல் வாயிலாக அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் இந்த புத்தகத்தை அண்ணாமலை கட்டாயம் படிப்பார் என நம்புவதாக கூறியுள்ள மாணவர் கழகம் இது குறித்து அவருடன் விவாதிக்க தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | இந்து என்ற அடையாளத்தை கட்டாயப்படுத்தக்கூடாது விசிக எம்.எல்.ஏ சிந்தனை செல்வன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News