மேலூரில் நடைபெறும் வன்கொடுமைகள்: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் மேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்,  வன்கொடுமைகளுக்கு எதிராக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அரச முத்துபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 1, 2024, 01:27 PM IST
  • மேலூர் பகுதிகளில் நடைபெறும் வன்கொடுமைகள்.
  • காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம்.
  • மேலூர் பகுதி காவல்துறையினருக்கு தமிழக அரசு பயிற்சி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.
மேலூரில் நடைபெறும் வன்கொடுமைகள்: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் title=

மேலூர் பகுதிகளில் நடைபெறும் வன்கொடுமைகளுக்கு எதிராக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து மேலூர் பகுதி காவல்துறையினருக்கு தமிழக அரசு பயிற்சி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தொயுள்ளனர். 

மதுரை மாவட்டம் மேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்,  வன்கொடுமைகளுக்கு எதிராக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அரச முத்துபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக, மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து, பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மேலூர் பேருந்து நிலையம் அருகே ஊர்வலமாக வந்து, மேலூர் பகுதிகளில் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இதுகுறித்து மேலூர் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் சாட்டி, பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இதுகுறித்த புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்காத மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு எதிராகவும், வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்து மேலூர் பகுதி காவல்துறையினருக்கு, தமிழக அரசு உரிய பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் படிக்க | சென்னையில் இறைச்சிக்காக பூனை கடத்தல்... ஷாக் ஆன இளைஞர் - பரபரப்பு பேட்டி!

தொடர்ந்து, மேலூர் பகுதிகளில் வன்கொடுமைகளுக்கு எதிராக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மேலூர் பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், மேலூர் (பொறுப்பு) காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு தலைமையிலான காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்கு பெயர்கிறார் குரு பகவான், ஆலங்குடியில் பிரமாண்ட வைபவம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News