மத்திய பட்ஜெட் 2020 ஆண்டின் நிறைகளும், குறைகளும் சமமாக இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட், பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் வழக்கம் இருந்து வந்தது. இந்த வழக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முதலாவது பாரதீய ஜனதா கூட்டணி அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு மாற்றியது. அப்போது முதல் பிப்ரவரி 1-ஆம் தேதியன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அப்போது.,
இந்த நிலையில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
வருமானவரி விகிதம் குறைப்பு, வீட்டுக்கடன் சலுகை, 15 லட்சம் கோடி விவசாயக் கடன் உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தனிநபர் வருமானத்தை உயர்த்தும் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் இல்லாதது ஏமாற்றமளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பை பலமடங்கு உயர்த்துவதற்கான செயல்திட்டங்கள், நதிகள் இணைப்பு குறித்த அறிவிப்புகள் இல்லை எனக் குறிப்பிட்டு குறைகளும் நிறைந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.