நாமக்கல்லில் பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
‘தமிழகத்தில் கடந்த ஓராண்டாக நடைபெறும் ஊழல்கள் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். ஆனால் அந்த குற்றச்சாட்டுகளுக்கு தமிழக முதல்வர் இதுவரை பதில் அளிக்காமல் மெளனமாக இருந்து வரும் நிலையில், மெளனம் சம்மதத்திற்கு அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிப் பதவிக்கு போட்டிபோடும் ‘எதிர்க்கட்சிகள்’!
நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் அமலாக்கத் துறையினர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை விசாரிக்க சம்மன் அனுப்பி உள்ளது. குற்றச்சாட்டில் உண்மையில்லை எனில் நீதிமன்றத்தில் சென்று வழக்காடுவதற்குப் பதிலாக காங்கிரஸ் கட்சியினரை தூண்டிவிட்டு போராட்டத்தை நடத்தி தலைமை வேடிக்கைப் பார்க்கிறது. இதன்மூலம் அவர்கள் நீதித்துறையை மதிக்கவில்லை என தெரிய வருகிறது.
காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்தை வடிவேல் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் "சின்னப் பிள்ளை" தனமாக உள்ளது. மேலும் போராட்டத்தின் போது ப.சிதம்பரம் , கரூர் எம்.பி ஜோதிமணி ஆகியோர் மீது டெல்லி போலீசார் தாக்குதல் நடத்தவில்லை. சிறிய விசயத்தையெல்லாம் பெரிதாக்கி வருகின்றனர். ஜோதிமணி மீது யாரும் தாக்குதல் நடத்த தேவையில்லை. அவரை செந்தில் பாலாஜியே பார்த்து கொள்வார்.
அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை பொதுக்குழு கூடி எடுக்க வேண்டிய விவகாரம். இதில் பாஜக ஒரு போது தலையிடாது. பிரதமர் கூறியதன் அடிப்படையிலே துணை முதல்வர் பதவிக்கு ஒப்புக்கொண்டதாக ஓபிஎஸ் தெரிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | பாஜகவில் பதவி பெற பல லட்ச ரூபாய் பேரம்: குமுறும் பெண் நிர்வாகி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR